பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள்; அக்.2, நவ.14ல் நடக்கின்றன

Added : செப் 27, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்., 2, முன்னாள்பிரதமர் நேரு பிறந்த நாளான நவ., 14ல் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் உலக தமிழ்ச்சங்க வளாகத்தில் நடக்கவுள்ளன.கலெக்டர் அனீஷ்சேகர் கூறியதாவது: போட்டிகளுக்கான விண்ணப்பங்களை மாணவர்கள்தங்கள் கல்வி நிறுவனங்களில் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களில்முதல்வர்,

மதுரை : மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்., 2, முன்னாள்பிரதமர் நேரு பிறந்த நாளான நவ., 14ல் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் உலக தமிழ்ச்சங்க வளாகத்தில் நடக்கவுள்ளன.

கலெக்டர் அனீஷ்சேகர் கூறியதாவது: போட்டிகளுக்கான விண்ணப்பங்களை மாணவர்கள்தங்கள் கல்வி நிறுவனங்களில் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களில்முதல்வர், தலைமையாசிரியர் கையெழுத்து பெற்று போட்டி நாளன்று தமிழ் வளர்ச்சித்துறைஇயக்குனரிடம் நேரில் வழங்கலாம்.ஒரு கல்லுாரி,பள்ளியிலிருந்து தலா இரு மாணவர்கள் வீதம் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். போட்டிக்கான தலைப்புகள் முன்னதாக தெரிவிக்கப்படாது.

சென்னை தமிழ் வளர்ச்சி இயக்குனரகத்திலிருந்து முத்திரையிடப்பட்ட உறையில் அனுப்பப்படும்தலைப்புகள் போட்டியின் போது நடுவர் முன்னிலையில் பிரிக்கப்பட்டு, அறிவிக்கப்படும். ஒரே நாளில்போட்டிகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.5000, 2வது பரிசு ரூ.3000, 3வது பரிசு ரூ.2000 வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில்பங்கேற்றவர்களுள் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேர் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X