அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ஜல்சக்தி திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு; மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல்

Updated : செப் 27, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
சென்னை : 'தமிழகத்தில் மீதமுள்ள அனைத்து வீடுகளுக்கும், ஜல்சக்தி திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க வேண்டும்' என மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் உத்தரவிட்டுள்ளார்.மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் ஜல்சக்தி துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல், இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார்.தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், செயலர் கோபால்,

சென்னை : 'தமிழகத்தில் மீதமுள்ள அனைத்து வீடுகளுக்கும், ஜல்சக்தி திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க வேண்டும்' என மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் உத்தரவிட்டுள்ளார்.



latest tamil news




மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் ஜல்சக்தி துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல், இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார்.தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், செயலர் கோபால், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இயக்குனர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில், 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளை சேர்ந்த 1.27 கோடி வீடுகளில், இதுவரை 46.33 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு கட்டடங்களுக்கு 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை, மத்திய அமைச்சர் பாராட்டினார்.குடிநீர் இணைப்புகளை உரிய முறையில் பராமரித்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இத்திட்டத்திற்கான குடிநீர் ஆதாரங்களை மேமம்படுத்தவும், பாதுகாக்கவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அனைத்து வீடுகளுக்கும் படிப்படியாக, கூட்டு குடிநீர் திட்டங்கள் வாயிலாக குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்க வேண்டும்.


latest tamil news




மக்களிடம் சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படியும், பிரகலாத் சிங் பட்டேல் அறிவுறுத்தினார். இந்த தகவல்களை, செய்திக்குறிப்பு வாயிலாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
27-செப்-202116:14:45 IST Report Abuse
DVRR ஐயோ ஐயோ அப்போ ஸ்டாலின் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர் என்று சொல்வது போலவே இருக்கின்றது இந்த டாஸ்மாக்கினாட்டில் என்று வெறும் ஒன்றிய அரசு அதாவது மத்திய அரசு தான் எல்லாம் செய்வது போல???பாவம் ஸ்டாலின்??என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கின்ற மாதிரி இருக்கின்றது????
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
27-செப்-202115:22:47 IST Report Abuse
R.RAMACHANDRAN தமிழ் நாட்டில் உள்ள பள்ளிகளுக்கெல்லாம் ஏற்கெனவே குடிநீர் இணைப்பை வழங்கப்பட்டிருந்த நிலையில் இப்போதுதான் வழங்கியது போலவும் ஏற்கெனவே பெரும்பாலான குடியிருப்புக்களுக்கு குடி நீர் குழாய் மூலம் வழங்கி வரும் நிலையில் இப்போதுதான் வழங்குவது போல சித்தரித்து கொள்ளையடிக்க இப்படி ஒரு திட்டம்.
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
27-செப்-202114:10:38 IST Report Abuse
தமிழ் மைந்தன் இதற்கான கட்டணம் எவ்வளவு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X