பொது செய்தி

தமிழ்நாடு

கொடைக்கானல் மலைப்பகுதியில் 300 கி.மீ.,க்கு சைக்கிள் பயணம்

Added : செப் 27, 2021
Share
Advertisement
கொடைக்கானல் : கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் 300 கி.மீ., சைக்கிள் பயணத்தில் 37 வீரர்கள் ஈடுபட்டனர்.பிரான்ஸ் நாட்டில் தொலைதூர சைக்கிள் பயணத்தின் நூற்றாண்டை முன்னிட்டு இந்தியா ஆடாக்ஸ், மதுரை கிளப் மூலம் 300 கி.மீ.,க்கு மலைரோட்டில் சைக்கிள் பயணத்தில் 37 பேர் ஈடுபட்டனர். மதுரை எஸ்.எஸ்., காலனியில் துவங்கி பன்றிமலை, ஆடலூர், தடியன்குடிசை மார்க்கமாக வத்தலக்குண்டில்
 கொடைக்கானல் மலைப்பகுதியில் 300 கி.மீ.,க்கு சைக்கிள் பயணம்

கொடைக்கானல் : கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் 300 கி.மீ., சைக்கிள் பயணத்தில் 37 வீரர்கள் ஈடுபட்டனர்.

பிரான்ஸ் நாட்டில் தொலைதூர சைக்கிள் பயணத்தின் நூற்றாண்டை முன்னிட்டு இந்தியா ஆடாக்ஸ், மதுரை கிளப் மூலம் 300 கி.மீ.,க்கு மலைரோட்டில் சைக்கிள் பயணத்தில் 37 பேர் ஈடுபட்டனர். மதுரை எஸ்.எஸ்., காலனியில் துவங்கி பன்றிமலை, ஆடலூர், தடியன்குடிசை மார்க்கமாக வத்தலக்குண்டில் இருந்து கொடைக்கானல் சென்று மீண்டும் வந்தடைவது இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 300 கி.மீ., இலக்கை 20 மணி நேரத்தில் அடைந்தனர்.

இதில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த ஜெகதீஷ்படிகா குமார் கூறுகையில்,''ஓராண்டில் 200 முதல் 600 கி.மீ., வரையிலான போட்டிகளில் பங்கேற்றால் 'சூப்பர் ரேண்டனியர்' பதக்கம் பிரான்ஸ் நாட்டில் வழங்கப்படுகிறது. பயணத்தின் போது சைக்கிளில் ஏற்படும் பழுதுகளை தாங்களே சரி செய்ய வேண்டும். சைக்கிள் பயணம் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி தரும். குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை அடைந்தால் மட்டுமே வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்'', என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X