தமிழ்நாடு

பாதாள சாக்கடை பணிகளால் பொதுமக்கள் பரிதவிப்பு! விரைந்து முடிக்கப்படுமா?

Added : செப் 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை: மதுரை மாநகராட்சியுடன் இணைந்த விரிவாக்க வார்டுகளில் பாதாள சாக்கடை தொட்டிகளை அமைக்க ரோடுகளை தோண்டியுள்ளதால் பொதுமக்கள் பரிதவிக்கின்றனர். இழுபறியில் நடக்கும் இப்பணிகளை மாநகராட்சி நிர்வாகம் விரைவுபடுத்த வேண்டும்.மாநகராட்சியில் முன் 72 வார்டுகள் இருந்தன. சுற்றியுள்ள நகராட்சி, ஊராட்சி பகுதிகளை இணைத்து நுாறு வார்டுகளாக மாநகராட்சி விரிவுப்படுத்தப்பட்டது.
பாதாள சாக்கடை பணிகளால் பொதுமக்கள் பரிதவிப்பு! விரைந்து முடிக்கப்படுமா?

மதுரை: மதுரை மாநகராட்சியுடன் இணைந்த விரிவாக்க வார்டுகளில் பாதாள சாக்கடை தொட்டிகளை அமைக்க ரோடுகளை தோண்டியுள்ளதால் பொதுமக்கள் பரிதவிக்கின்றனர். இழுபறியில் நடக்கும் இப்பணிகளை மாநகராட்சி நிர்வாகம் விரைவுபடுத்த வேண்டும்.

மாநகராட்சியில் முன் 72 வார்டுகள் இருந்தன. சுற்றியுள்ள நகராட்சி, ஊராட்சி பகுதிகளை இணைத்து நுாறு வார்டுகளாக மாநகராட்சி விரிவுப்படுத்தப்பட்டது. இணைந்த 28 வார்டுகளில் பாதாள சாக்கடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். அதை ஏற்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.293.37 கோடியில் பாதாள சாக்கடை பணிகள் கடந்தாண்டு துவங்கின. முதற்கட்டமாக 13 வார்டுகளில் இப்பணிகள் நடக்கின்றன.

இதற்காக நாராயணபுரம், பாங்க்காலனி, அய்யர்பங்களா, திருப்பாலை, கண்ணனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் ரோடுகளை தோண்டி மெகா தொட்டிகள் பதிக்கப்படுகின்றன. தொட்டிகளை இணைக்க ரோடுகளின் நடுவில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் இணைக்கப்படுகின்றன. சில பகுதிகளில் தோண்டிய ரோடுகளை ஒப்பந்ததாரர்கள் சரியாக மூடாமல் செல்வதால் குண்டும் குழியுமாக மாறியுள்ளன. தற்போது மழை பெய்வதால் அனைத்து ரோடுகளும் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன.

டூவீலர்களில் செல்வோர் சரியாக மூடப்படாத பள்ளங்களில் விழுந்து விபத்திற்குள்ளாகின்றனர். சில ரோடுகளில் கார், குடிநீர் லாரிகள் செல்ல முடியாதளவு தோண்டப்பட்டுள்ளன. பள்ளம்தோண்டும்போது குடிநீர் குழாய், கேபிள் ஒயர் குழாய்களையும் சேதப்படுத்தி விடுகின்றனர். இதனால் குடிநீர் சில இடங்களில் வீணாகிறது. இத்திட்டத்தில் இனி வீடுகளுக்கு இணைப்பு குழாய்கள் கொடுக்க மறுபடியும் ரோடு, தெருக்கள் தோண்டப்படவுள்ளன.பொதுமக்கள் நலன் கருதி பணிகளை விரைவுபடுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rmr - chennai,இந்தியா
27-செப்-202117:05:15 IST Report Abuse
rmr tamilagam muluvathum ithe nillai than
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X