பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில் 58,583 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Added : செப் 27, 2021
Share
Advertisement
தேனி : தேனி மாவட்டத்தில் நேற்று 3வது வாரமாக 'மெகா' கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. நேற்று ஒரேநாளில் 58,583 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.மாவட்டத்தில் நேற்று மொத்தம் 193 இடங்கில் முகாம் நடந்தது. காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். 204 மாற்றுத்திறனாளிகள் உட்பட மொத்தம் 58,583 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் முதல்

தேனி : தேனி மாவட்டத்தில் நேற்று 3வது வாரமாக 'மெகா' கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. நேற்று ஒரேநாளில் 58,583 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மாவட்டத்தில் நேற்று மொத்தம் 193 இடங்கில் முகாம் நடந்தது. காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். 204 மாற்றுத்திறனாளிகள் உட்பட மொத்தம் 58,583 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் முதல் தவணையாக 35,056 பேரும், இரண்டாம் தவணையாக 23,527 பேரும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

மாவட்டம் முழுதும் கலெக்டர் முரளீதரன் கொரோனா தடுப்பூசி மையங்களை ஆய்வு செய்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் முத்துக்குமர் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அண்ணாதுறை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வெற்றிலை, பாக்குடன் அழைப்பு

* கீழவடகரை ஊராட்சி தலைவர் செல்வராணி, கணவர் செல்வராஜ் ஆகியோர் வெற்றிலை, பாக்கு வைத்து தடுப்பூசி செலுத்தி கொள்ள அழைப்பு விடுத்தனர்.

* கூடலூரில் கொரோனா தடுப்பூசி முகாமை நகராட்சி கமிஷனர் சேகர், நகராட்சி பொறியாளர் சரவணகுமார், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் முன்னிலையில் வட்டார மருத்துவ அலுவலர் முருகன் துவக்கி வைத்தார்.

* சுருளிப்பட்டியில் சித்தா டாக்டர் சிராசுதீன் தலைமையில் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. கம்பம், காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி ஆங்கூர்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்த தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X