தமிழ்நாடு

கம்பமெட்டு ரோட்டை அகலப்படுத்த திட்டம்; வனத்துறையுடன் பேச நெடுஞ்சாலைத்துறை முடிவு

Added : செப் 27, 2021
Share
Advertisement
கம்பம் : கம்பத்திலிருந்து கம்பமெட்டு செல்லும் ரோட்டை அகலப்படுத்த முடிவெடுத்துள்ள நெடுஞ்சாலைத்துறை வனத்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.கேரளாவை தமிழகத்துடன் இணைக்க தேனி மாவட்டத்தில் போடிமெட்டு, குமுளி, கம்பமெட்டு ரோடுகள் உள்ளன. இதில் போடிமெட்டு, குமுளி ரோடுகள் தேசிய நெடுஞ்சாலைத்துறை வசம் இருப்பதால் முறையாக பராமரிக்கப்படுகிறது. கம்பமெட்டு ரோடு மாநில

கம்பம் : கம்பத்திலிருந்து கம்பமெட்டு செல்லும் ரோட்டை அகலப்படுத்த முடிவெடுத்துள்ள நெடுஞ்சாலைத்துறை வனத்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

கேரளாவை தமிழகத்துடன் இணைக்க தேனி மாவட்டத்தில் போடிமெட்டு, குமுளி, கம்பமெட்டு ரோடுகள் உள்ளன. இதில் போடிமெட்டு, குமுளி ரோடுகள் தேசிய நெடுஞ்சாலைத்துறை வசம் இருப்பதால் முறையாக பராமரிக்கப்படுகிறது. கம்பமெட்டு ரோடு மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் உள்ளது.

போடிமெட்டு ரோட்டில் பிரச்னையானால் மூணாறு செல்லவும், சபரிமலை சீசனில் ஐயப்பன் கோயில் பக்தர்களுக்கு ஒருவழிப்பாதையாக உள்ளது.இதனால் கம்பமெட்டு ரோட்டை அகலப்படுத்த ஏல விவசாயிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கம்பத்திலிருந்து 13 கி.மீ., தொலைவில் உள்ள கம்பமெட்டு கேரளாவிற்கு சொந்தமான பகுதி. இதில் கேர்பின் வளைவுகளுடன் மலைப்பாதை மட்டும் 7 கி.மீட்டராகும்.

தற்போது இந்த ரோடு 5.5 மீட்டர் முதல் 7 மீட்டர் வரை அகலம் உள்ளது. வளைவுகளில் அகலமாகவும், பிற இடங்களில் குறுகலாகவும் உள்ளது. இந்த ரோட்டை ஒரு மீட்டர் முதல் இரண்டு மீட்டர் வரை அகலப்படுத்த திட்டமிட்டுள்ள நெடுஞ்சாலைத்துறை அனுமதிகோரி வனத்துறையை நாட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X