அரசியல் செய்தி

தமிழ்நாடு

தசைநார் சிதைவு நோய்க்கு ரூ.16 கோடி தடுப்பூசி வதந்தி; அமைச்சர் சுப்பிரமணியன்

Updated : செப் 27, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
தஞ்சாவூர் : ''தசைநார் சிதைவு நோய்க்கு இதுவரை எங்கும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அது, தீர்க்கப்பட்டதாகவும் இல்லை. 16 கோடி ரூபாய்க்கு எங்குமே தடுப்பூசி இல்லை; அது வதந்தி,'' என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.தஞ்சாவூரில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்ட பின், அவர் கூறியதாவது:தமிழகத்தில் இதுவரை 4.43 கோடி

தஞ்சாவூர் : ''தசைநார் சிதைவு நோய்க்கு இதுவரை எங்கும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அது, தீர்க்கப்பட்டதாகவும் இல்லை. 16 கோடி ரூபாய்க்கு எங்குமே தடுப்பூசி இல்லை; அது வதந்தி,'' என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.latest tamil news
தஞ்சாவூரில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்ட பின், அவர் கூறியதாவது:தமிழகத்தில் இதுவரை 4.43 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் 5 கோடியை எட்டி விடும். 500க்கும் அதிகமான கிராமங்களில், 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அ.தி.மு.க., ஆட்சியில் நாள் ஒன்றுக்கு 61 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டன. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், நாள் ஒன்றுக்கு 2.52 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.


latest tamil news
மத்திய அரசிடம் இருந்து வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும் என கேட்டுள்ளோம். அதன்படி அடுத்த வாரம் 50 லட்சம் தடுப்பூசிகள் வரப் பெற்றால், அடுத்த ஞாயிற்றுக் கிழமையும் மாபெரும் முகாம் நடத்தப்படும்.இந்தியாவில் இன்னும் 115 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலையில், மற்ற நாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்வது தேவையற்றது. தசைநார் சிதைவு நோய்க்கு, இதுவரை எங்கும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. அது தீர்க்கப்பட்டதாகவும் இல்லை. 16 கோடி ரூபாய்க்கு எங்குமே தடுப்பூசி இல்லை; அது வதந்தியான செய்தி.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-அக்-202120:36:46 IST Report Abuse
PremKumar இந்த மருந்தை செலுத்துவதால் இந்த குழந்தை எத்தனை வருடங்கள் உயிருடன் இருக்கும்?
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
27-செப்-202116:57:21 IST Report Abuse
DVRR ஏலே தண்டக்கருமாந்திரம் இதை படித்து புரிந்து கொள் சுத்தமாக அறிவில்லை உனக்கு என்று தெரியும் உன் உளறலை வைத்து . கீழே உள்ளதை படி. தசை நார் சிதைவு நோய்க்கு ரூ 18 கோடி. இவன் எல்லாம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்???மாசு தான் இவன் சரியான பெயர் அவ்வளவு மாசு படிந்தவன்??? Zolgensma which has a reported list price of £1.79 million( ₹18 crore) per dose is labelled the most expensive drug in the world. Zolgensma was approved by the NHS England on Monday to treat babies with a rare fatal genetic disorder. Zolgensma, a life-saving drug, can enable mobility in babies and young children suffering from a rare genetic condition. Zolgensma is an adeno-associated virus vector-based gene therapy indicated for the treatment of pediatric patient less than 2 years of age with spinal muscular atrophy (SMA).
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
27-செப்-202116:11:08 IST Report Abuse
DVRR ஏன் இங்கே தினமலரில் வந்து விட்டதே இது வரை 4 தடவை அதுவும் குழந்தைகள் 3 வயது கொஞ்சம் அதிகம் கொஞ்சம் குறைவு இப்படி. அதில் ஒரு குழந்தை இறந்து விட்டது. அப்போ அது எல்லாமே Fake நியூஸா????????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X