தமிழ்நாடு

சிவகங்கை மாவட்டத்தில் ரூ.157 கோடிக்கு பொருட்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி

Added : செப் 27, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் 2020-21ல் 157.71 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.சிவகங்கை மாவட்ட தொழில் மையம் சார்பில் ஏற்றுமதியாளர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை வகித்து பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. வேளாண் விளை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் 2020-21ல் 157.71 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்ட தொழில் மையம் சார்பில் ஏற்றுமதியாளர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை வகித்து பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. வேளாண் விளை பொருட்களில் உள்ள வேதிப் பொருட்களுக்கு வெளி நாடுகளில் நல்ல தேவை உள்ளது. குறிப்பாக தக்காளி, மிளகாய் போன்றவற்றில் உள்ள வேதிப் பொருட்களை பிரித்தெடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் பன்மடங்கு லாபம் ஈட்ட முடியும்.

ஒரு தொழில்முனைவோருக்கு சிறு, குறு தொழில் தொடங்க 5 கோடி ரூபாய் வரை மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது.பின் தங்கிய பகுதிகளில் தொழில் தொடங்கினால் 25 சதவீத முதலீட்டு மானியம் அரசால் வழங்கப்படுகிறது. சிறு, குறு தொழில் தொடங்கிய 3 ஆண்டுகளுக்கு 20 சதவீத மின் மானியம், அதன் பின்பு 25 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. சிறு, குறு, நடுத்தர தொழிலில் 4320 நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. இதில் 28 ஆயிரத்து 957 பேர் பயன் பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் 2020-21ல் 157.71 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயத்த ஆடைகள், தென்னை நார் கழிவுகளில் தயாரிக்கப்படும் பொருட்கள், உணவு மசாலா பொருட்கள், ஆத்தங்குடி டைல்ஸ், சுங்குடி சேலைகள், பொம்மைகள், பாசுமதி அரிசி போன்ற பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.சிப்காட், சிட்கோ, ஸ்பைசஸ் பார்க் ஆகிய இடங்களில் அதிகளவு தொழில் நிறுவனங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய மேலாளர் கணேசன், சிறு தொழில்கள் சங்க கூட்டமைப்பு தலைவர்கள் முகமது ஹூசேன், சேலம் செந்தில் முருகன், ஏற்றுமதி நிறுவனங்களின் ஆலோசகர் ராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், சிறு, குறு தொழில் நிறுவன இயக்குநர் உமாசந்திரிகா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரெத்தினவேல், மாவட்ட தொழில் மைய கண்காணிப்பாளர் தேவராஜ், பொறியாளர் சரவணன் உட்பட தொழில் நிறுவன அதிபர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X