பொது செய்தி

தமிழ்நாடு

சோலைவனமாக மாறிய மயானம்; நூறுநாள் திட்டத்தில் அசத்தல்

Added : செப் 27, 2021
Share
Advertisement
காரியாபட்டி : ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை என்பது போராட்டமாகத்தான் இருந்திருக்கும். இன்பத்தை விட அதிக அளவு துன்பத்தை அனுபவித்தவர்கள் அதிகம் எனலாம். வாழும்போது தான் பல்வேறு பிரச்னைகள் என்றால் இறுதி நாளிலும் ஏராளமான பிரச்னைகள் எழுவது உண்டு. குறிப்பாக மயானத்தில் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி நிம்மதியை கெடுப்பவர்கள் உண்டு. இதையெல்லாம் தாண்டி மயானத்தில் அடிப்படை
 சோலைவனமாக மாறிய மயானம்;  நூறுநாள் திட்டத்தில் அசத்தல்

காரியாபட்டி : ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை என்பது போராட்டமாகத்தான் இருந்திருக்கும். இன்பத்தை விட அதிக அளவு துன்பத்தை அனுபவித்தவர்கள் அதிகம் எனலாம். வாழும்போது தான் பல்வேறு பிரச்னைகள் என்றால் இறுதி நாளிலும் ஏராளமான பிரச்னைகள் எழுவது உண்டு.

குறிப்பாக மயானத்தில் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி நிம்மதியை கெடுப்பவர்கள் உண்டு. இதையெல்லாம் தாண்டி மயானத்தில் அடிப்படை வசதிகள் என்பது மிக மிக குறைவு எனலாம். தண்ணீர் பிரச்னை, வெயிலுக்கு ஒதுங்க முடியாமல் தவிக்கும் மனநிலை என பல்வேறு இன்னல்களை அனுபவிக்க வேண்டிய அவல நிலையில்தான் பெரும்பாலான மயானங்கள் உள்ளன.

ஆனால் இதையெல்லாம் தாண்டி ஒரு மனிதனுக்கு இறுதி நாளிலாவது நிம்மதி வேண்டும் என்பதைத்தான் எல்லோரும் விரும்புவர். அந்த வகையில் காரியாபட்டி கல்குறிச்சி மயானத்தை சோலை வனமாக மாற்றி அசத்தி உள்ளனர். முட்கள் அடர்ந்து படுமோசமாக கிடந்த மயானத்தை, வேம்பு, புங்கை, அரச மரம் என பல்வேறு வகையான மரங்களை வளர்த்து சோலைவனமாக மாற்றி முன்னுதாரணமாக ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இதற்கு முக்கிய காரணம் 100 நாள் திட்ட பணியாளர்கள் என்றால் அது மிகையாகாது. ஒரு காலத்தில் மயானம் இருந்த இடமே தெரியாமல் தேடிக் கண்டறிந்து பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் இறுதிச்சடங்கு செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது. தற்போது அனைத்து அடிப்படை வசதிகளுடன் மரங்களால் சூழ்ந்து பசுமையாக காட்சி தருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X