போலீஸ் செய்திகள்

Added : செப் 27, 2021
Share
Advertisement
வாலிபர் மீது தாக்குதல்சிவகாசி: மருதுபாண்டியர் தெருவைச் சேர்ந்தவர் ராகுமார் 22. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக், முத்து மணிகண்டன் ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் ராகுமார் முத்தாலம்மன் கோயில் அருகே வரும்போது கார்த்திக், முத்து மணிகண்டன் ஆகியோர் அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.விபத்தில் தம்பதி

வாலிபர் மீது தாக்குதல்

சிவகாசி: மருதுபாண்டியர் தெருவைச் சேர்ந்தவர் ராகுமார் 22. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக், முத்து மணிகண்டன் ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் ராகுமார் முத்தாலம்மன் கோயில் அருகே வரும்போது கார்த்திக், முத்து மணிகண்டன் ஆகியோர் அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

விபத்தில் தம்பதி காயம்

சிவகாசி: விருதுநகர் ஓ.கோவில்பட்டியை சேர்ந்தவர் முத்தையா 75. இவரும் இவரது மனைவியும் டூவீலரில் எரிச்சநத்தம் ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே எரிச்சநத்தம் அபிஷேக் ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் கணவன், மனைவி இருவரும் காயமடைந்தனர். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

டூவீலர் பறித்தவர் கைது

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே கோதை நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் கார்த்திக் 21, இரும்பு கடை கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வேலை முடிந்து திரும்பும் போது அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் 18, வழிமறித்து டூவீலரை திருடி உள்ளார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

கல்லுாரி மாணவரிடம் வழிப்பறி

தளவாய்புரம்: சேத்துார் காமராஜர் நகரை சேர்ந்த கல்லுாரி மாணவர் மாணிக்கம் 19. இவர் சேத்துார் புறவழிச்சாலை பிள்ளையார் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது மந்தை தெருவை சேர்ந்த சிவகணேசன் கத்தியை காட்டி மிரட்டி பணம், அலைபேசியை பிடுங்க முயற்சித்தார். அக்கம்பக்கத்தினர் விரட்டியதில் சிவகணேசன் தப்பி ஓடியுள்ளார். சேத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X