தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் ரவுடிகள் நடமாட்டம்; வாகன டிரைவர்களுக்கு அறிவுரை

Added : செப் 27, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ரவுடிகளை கட்டுப்படுத்த அவர்கள் குறித்த தகவல்களை போலீசாருக்கு தெரிவிக்குமாறு பஸ் டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் வாடகை வாகன டிரைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் போலீசார் அறிவுரை வழங்கினர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்தவும், கைது செய்யவும் எஸ்.பி., கார்த்திக் நடவடிக்கை எடுத்துள்ளார். 504 பேர் அடையாளம் காணப்பட்டுஉள்ளனர். இவர்களில்

ராமநாதபுரம் : ரவுடிகளை கட்டுப்படுத்த அவர்கள் குறித்த தகவல்களை போலீசாருக்கு தெரிவிக்குமாறு பஸ் டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் வாடகை வாகன டிரைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் போலீசார் அறிவுரை வழங்கினர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்தவும், கைது செய்யவும் எஸ்.பி., கார்த்திக் நடவடிக்கை எடுத்துள்ளார். 504 பேர் அடையாளம் காணப்பட்டுஉள்ளனர். இவர்களில் சிலர் சிறையில் உள்ளனர்.271 ரவுடிகள் மீது குற்ற பதிவேடு துவக்கப்பட்டு நடவடிக்கை கண்காணிக்கப்படுகிறது.

மீதம் உள்ளவர்களுக்கும் குற்றப்பதிவேடு தயாரிக்கப்பட உள்ளது.செப்.23 முதல் 235 ரவுடிகள் போலீஸ் ஸ்டேஷன் கொண்டுவரப்பட்டு எச்சரித்து அனுப்பப்பட்டனர். 18 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாள் அரிவாள், ஈட்டி உள்ளிட்ட 306 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளன.நேற்று அனைத்து டி.எஸ்.பி., அலுவலகங்களில் பஸ் டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்கள், அனைத்து வாடகை வாகன டிரைவர்களை அழைத்து கூட்டம் நடத்தப்பட்டது.

இதில், ரவுடிகள் நடமாட்டம், பயங்கர ஆயுதங்கள் வைத்திருப்போர், சந்தேக நபர்கள் குறித்து உடனடியாக மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு 04567-230 759 மற்றும் 83000 31100 என்ற எண்ணிலும், மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்தை 04567- 232110, 232111 தொலைபேசியிலும், எஸ்.பி.,க்கு 87782 47265 என்ற அலைபேசியிலும், சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் தெரிவிக்க வேண்டும். விவரம் ரகசியம் காக்கப்படும், என தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X