பொது செய்தி

இந்தியா

சாலை பாதுகாப்புக்காக ரூ.7,270 கோடியில் திட்டம்

Updated : செப் 27, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
அமராவதி : சாலை விபத்துக்களில் ஏற்படும் மரணத்தை முற்றிலும் தவிர்க்க, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உட்பட 14 மாநிலங்களில் சாலைப் பாதுகாப்புக்காக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் 7,270 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டத்தை தீட்டியுள்ளது.மத்திய சாலை போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:மத்திய அரசின் நிதியுதவியுடன் 14

அமராவதி : சாலை விபத்துக்களில் ஏற்படும் மரணத்தை முற்றிலும் தவிர்க்க, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உட்பட 14 மாநிலங்களில் சாலைப் பாதுகாப்புக்காக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் 7,270 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டத்தை தீட்டியுள்ளது.



latest tamil news



மத்திய சாலை போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:மத்திய அரசின் நிதியுதவியுடன் 14 மாநிலங்களில் ஆறு ஆண்டு திட்டமாக, புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக பட்ஜெட்டில் 3,635 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றில் இருந்து தலா, 1,818 கோடி ரூபாய் கடனாக பெறப்படும்.இந்த திட்டம் உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், தமிழகம், ஆந்திர பிரதேசம், குஜ்ராத், பீகார், தெலுங்கானா, மேற்கு வங்கம், ஒடிசா, ஹரியானா மற்றும் அசாம் ஆகிய 14 மாநிலங்களில் செயல்படுத்தப்படும்.


latest tamil news




இதற்காக திரட்டப்படும் 7,270 கோடி ரூபாயில் 6,725 கோடி ரூபாய் மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படும்.திட்ட செயல்பாட்டு செலவுக்காக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை 545 கோடி ரூபாயை இருப்பு வைத்திருக்கும். இந்த திட்டத்தின் வாயிலாக சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகளை முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shakti - vilupuram,கோட்டி டி'ஐவைரி
27-செப்-202122:38:44 IST Report Abuse
shakti நடுரோட்டில் நிற்கும் லாரிகள் மற்றும் இதர வாகனங்கள் பார்க்கிங் லைட் அல்லது பின்புற விளக்கை எரிய விட்டாலே போதும், பல விபத்துகளை தவிர்க்கலாம்
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
27-செப்-202115:06:28 IST Report Abuse
JeevaKiran சாலையோர ஆக்கிரமிப்புகளை முளையிலேயே கலையப்படவேண்டும். அதற்கு அந்த பகுதி பொறியாளர்தான் பொறுப்பு என்று நிர்ணயிக்கப்படவேண்டும்.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
27-செப்-202114:49:46 IST Report Abuse
சீனி புதிய தொழில் நுட்பத்தை பயண்படுத்தி, ரோட்டில் டிரைவிங் எப்படி பண்ணுகிறார்கள், அதிவேகமாக வண்டி ஓடுதா, மேலும் வாகனக்கள் பராமரிக்கபடுகிறதா, பிரேக் ஒழுங்கா வேலை செய்யுதா, மேலும் ஓய்வில்லாம லாரி ஓட்டுபவர்களை கட்டாய ஓய்வு போன்றவைகளை புகுத்தலாம். சரியாக டிரைவிங் பண்ணாதவர்களுக்கு 1 வருடம் லைசென்சு ரத்து பண்ணினா, சாலையில் ஒழுங்க ஓட்டுவாங்க. அதே போல எந்த இடத்தில் எந்த நேரத்தில் டிராபிக் அதிகம் இருக்கும் என்று டிரைவருக்கு முன்பே மொபைல் மூலம் தெரிந்தால், அருகில் ஓய்வெடுத்து, டிராபிக் குறைந்தவுடன் அந்த பகுதியை கடந்து செல்லலாம். அதுவும் இல்லன்னா, விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகளில் பெரிய லாரிகளுக்கு என்று தனியாக 4 வழிச் சாலை அமைக்கலாம். ITI ல் முறையான ஹெவி டிரைவிங் மற்றும் வாகன பராமரிப்புக்கு க்கு 1 வருட பயிற்சி அளிக்கலாம், அதில் தேர்ச்சி பெறுபவர்களுகு மட்டுமே லாரி ஓட்ட அனுமதிக்க வேண்டும்.
Rate this:
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
27-செப்-202118:10:33 IST Report Abuse
Loganathan Kuttuvaநல்ல கருத்துக்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X