பொது செய்தி

தமிழ்நாடு

மரங்கள் வெட்டிய விவகாரம்: கோவை கலெக்டர் உத்தரவு

Added : செப் 27, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே, அசோகபுரம் ஊராட்சியில், மரங்கள் வெட்டிய விவகாரம் தொடர்பாக, உரிய விசாரணை மேற்கொள்ள, கோவை வடக்கு கோட்டாட்சியருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் பிறப்பித்துள்ள உத்தரவு:கோவை வடக்கு தாலுகா, என்.ஜி.ஜி.ஓ., காலனி, பாலாஜி நகர், பால கணேஷ் நகர் மற்றும் நியூ பாலாஜி நகர் குடியிருப்போர் நல சங்க தலைவரான ரவிச்சந்திரன், மனு

பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே, அசோகபுரம் ஊராட்சியில், மரங்கள் வெட்டிய விவகாரம் தொடர்பாக, உரிய விசாரணை மேற்கொள்ள, கோவை வடக்கு கோட்டாட்சியருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் பிறப்பித்துள்ள உத்தரவு:கோவை வடக்கு தாலுகா, என்.ஜி.ஜி.ஓ., காலனி, பாலாஜி நகர், பால கணேஷ் நகர் மற்றும் நியூ பாலாஜி நகர் குடியிருப்போர் நல சங்க தலைவரான ரவிச்சந்திரன், மனு அளித்துள்ளார். அதில், அசோகபுரம் ஊராட்சியில், வருவாய்த்துறை முன்அனுமதி இல்லாமல், ஊராட்சித் தலைவர், துணை தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்கள், 60 டன் எடையுள்ள, விலை உயர்ந்த மரங்களை வெட்டியுள்ளனர்.அதனை முறைகேடாக விற்று, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி, அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர். இது குறித்து, பலமுறை முறையீடு அனுப்பப்பட்டதன் பேரில், மரம் வெட்டிய விவகாரம் தொடர்பாக மட்டும், வருவாய் கோட்டாட்சியரால் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், மரங்களை முன் அனுமதி இன்றி வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத, கோவை வடக்கு முன்னாள் தாசில்தார் மகேஷ் குமார் மற்றும் பெ.நா.பாளையம் முன்னாள் ஆர்.ஐ., நுார் முகமது ஆகியோர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவித்துள்ளார். இந்த மனு மீது, உரிய விசாரணை மேற்கொண்டு, உடன் விசாரணை அறிக்கையினை அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு, கோட்டாட்சியருக்கு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X