பொது செய்தி

தமிழ்நாடு

அங்கக வேளாண் முறையில் காய்கறி பயிர் சாகுபடி பயிற்சி

Added : செப் 27, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், அங்கக வேளாண்மை காய்கறி பயிர்கள் சாகுபடி பயிற்சி முகாம், நடந்தது.பெ.நா.பாளையம் ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், அட்மா திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கான 'அங்கக வேளாண்மை காய்கறி பயிர்கள் சாகுபடி' என்ற தலைப்பில் பயிற்சி

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், அங்கக வேளாண்மை காய்கறி பயிர்கள் சாகுபடி பயிற்சி முகாம், நடந்தது.பெ.நா.பாளையம் ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், அட்மா திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கான 'அங்கக வேளாண்மை காய்கறி பயிர்கள் சாகுபடி' என்ற தலைப்பில் பயிற்சி முகாம் நடந்தது.இதில், மண்வளம் பாதிக்காத வகையில், எவ்வாறு இயற்கையான இடுபொருட்களான பஞ்சகாவ்யா, மண்புழு உரம், ஜீவாமிர்தம், தசகாவ்யா ஆகியவற்றை பயன்படுத்தி காய்கறி பயிர்கள் சாகுபடி செய்வது குறித்து விளக்கப்பட்டது. மேலும், உற்பத்தியை அதிகரிப்பது, காய்கறி பயிர்கள் சாகுபடியில் விவசாயிகள் அதிக லாபம் பெறுவது குறித்தும், பல்வேறு தொழில் நுட்பங்களின் அடிப்படையில், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா வேளாண் கல்லூரி பேராசிரியர் ராம்குமார் பயிற்சி வழங்கினார்.நிகழ்ச்சியில், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வித்யா, அரசு வழங்கும் பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார்.பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட நிர்வாகிகள் புனிதா, தங்கமணி ஆகியோர் செய்து இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X