பொது செய்தி

தமிழ்நாடு

வார்டு உறுப்பினர் தேர்தல்: இருவர் போட்டியின்றி தேர்வு

Added : செப் 27, 2021
Share
Advertisement
சூலுார்:மூன்று ஊராட்சிகளில், காலியாக இருந்த மூன்று வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு, இரண்டு பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாக உள்ளது.சுல்தான்பேட்டை ஒன்றியத்தில், ஜே. கிருஷ்ணாபுரம், ஜல்லிப்பட்டி, போகம்பட்டி உள்ளிட்ட மூன்று ஊராட்சிகளில், தலா ஒரு வார்டு உறுப்பினர் என, மூன்று பதவியிடங்கள் காலியாக இருந்தன.கடந்த, 15 ம்தேதி மனுத்தாக்கல் துவங்கியது. மொத்தம், 15

சூலுார்:மூன்று ஊராட்சிகளில், காலியாக இருந்த மூன்று வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு, இரண்டு பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாக உள்ளது.சுல்தான்பேட்டை ஒன்றியத்தில், ஜே. கிருஷ்ணாபுரம், ஜல்லிப்பட்டி, போகம்பட்டி உள்ளிட்ட மூன்று ஊராட்சிகளில், தலா ஒரு வார்டு உறுப்பினர் என, மூன்று பதவியிடங்கள் காலியாக இருந்தன.கடந்த, 15 ம்தேதி மனுத்தாக்கல் துவங்கியது. மொத்தம், 15 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். பரிசீலனையில், அனைத்து மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.நேற்று முன்தினம், போகம்பட்டி ஊராட்சியில் மனுத்தாக்கல் செய்த எட்டு பேரில், நான்கு பேர், வாபஸ் பெற்றனர்.ஜல்லிப்பட்டி ஊராட்சியில், மனுத்தாக்கல் செய்த ஆறு பேரில், ஐந்து பேர் வாபஸ் பெற்றனர். இதனால், இங்கு கனகராஜ் என்பவர் போட்டியின்றித் தேர்வாவது உறுதியாகி உள்ளது.அதேபோல, ஜே. கிருஷ்ணாபுரத்தில் செல்வி என்பவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.போகம்பட்டியில் நான்கு பேர் களத்தில் உள்ளனர். வரும், அக்., 9ல் தேர்தல் நடக்க உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X