பொது செய்தி

தமிழ்நாடு

என்.எஸ்.எஸ்., முகாமில் மரம் நடும் விழா

Added : செப் 27, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே வட்டமலை பாளையத்தில், ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரியின் நாட்டு நலப்பணித் திட்டம், இடிகரை பேரூராட்சி இணைந்து, மரக்கன்று நடும் விழா நடந்தது.பேரூராட்சி செயல் அலுவலர் சூசை இன்பராஜேஷ், ராமகிருஷ்ண கல்லுாரி முதல்வர் உமா ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு, நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.இதில், பூவரசு வேம்பு, மலைவேம்பு, மகாகனி உட்பட, 14 வகையான
 என்.எஸ்.எஸ்., முகாமில் மரம் நடும் விழா

பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே வட்டமலை பாளையத்தில், ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரியின் நாட்டு நலப்பணித் திட்டம், இடிகரை பேரூராட்சி இணைந்து, மரக்கன்று நடும் விழா நடந்தது.பேரூராட்சி செயல் அலுவலர் சூசை இன்பராஜேஷ், ராமகிருஷ்ண கல்லுாரி முதல்வர் உமா ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு, நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.இதில், பூவரசு வேம்பு, மலைவேம்பு, மகாகனி உட்பட, 14 வகையான மரக்கன்றுகள், மியாவாக்கி முறையில், இடிகரை பேரூராட்சி கோவிந்தநாயக்கன்பாளையம், பெரியார் நகர் பகுதியில் நடப்பட்டன.நிகழ்ச்சியில், ஊராட்சிகள் உதவி இயக்குனர் துவாரகநாத் சிங், கல்லுாரி துறை தலைவர்கள் ஜெகதீஸ்வரன், வனிதா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் கார்த்திக், வினோ ஆகியோர் செய்து இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X