பொது செய்தி

தமிழ்நாடு

மூன்றாவது மெகா தடுப்பூசி முகாமில் மக்கள் ஆர்வம்; சிறப்பு ஏற்பாடுகளால் மகிழ்ச்சி

Added : செப் 27, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் தாலுகாவில், நேற்று நடந்த மூன்றாவது மெகா தடுப்பூசி முகாமில், 8167 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.மேட்டுப்பாளையம் தாலுகாவில் காரமடை ஒன்றியம், சிறுமுகை, காரமடை பேரூராட்சிகளில், 20 இடங்களிலும்; நகராட்சியில், 14 இடங்களிலும் என, 34 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.மேட்டுப்பாளையம் நகரில், 14 முகாம்களில், 3,080 பேருக்கு தடுப்பூசி
 மூன்றாவது மெகா தடுப்பூசி முகாமில் மக்கள் ஆர்வம்; சிறப்பு ஏற்பாடுகளால் மகிழ்ச்சி

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் தாலுகாவில், நேற்று நடந்த மூன்றாவது மெகா தடுப்பூசி முகாமில், 8167 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.மேட்டுப்பாளையம் தாலுகாவில் காரமடை ஒன்றியம், சிறுமுகை, காரமடை பேரூராட்சிகளில், 20 இடங்களிலும்; நகராட்சியில், 14 இடங்களிலும் என, 34 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.மேட்டுப்பாளையம் நகரில், 14 முகாம்களில், 3,080 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.காரமடை ஒன்றியத்தில், 20 முகாம்களில், 4,770 தடுப்பூசிகள் போடப்பட்டன.*மருதுார் ஊராட்சியில், 100 சதவீதம் தடுப்பூசி இலக்கை நோக்கி, முகாமுக்கு வரமுடியாத முதியோர்களுக்கு, வீடு வீடாகச் சென்று, தடுப்பூசி போடும் பணியில், ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதுவரை, 95 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.வீடு தேடி தடுப்பூசி திட்டத்தை, மண்டல துணை தாசில்தார் சுரேஷ்குமார், துவக்கி வைத்தார்.ஊராட்சி தலைவர் பூர்ணிமா, துணைத் தலைவர் தேன்மொழி ஊராட்சி செயலர் குருந்தாசலம், வார்டு உறுப்பினர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சூலுார்

சூலூர் வட்டாரத்தில், 27 இடங்களில் நடத்தப்பட்ட முகாம்களில், 7,500 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. சின்னியம்பாளையம் ஊராட்சியில், அதிகளவு மக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.சிறப்பு ஏற்பாடு

சின்னியம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்துடன், சுகாதாரத்துறை மற்றும் கே.எம்.சி.எச். மருத்துவமனை நிர்வாகமும் இணைந்து முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தன.தன்னார்வலர்கள் உதவியுடன், தடுப்பூசி போட வருவோரின் ஆதார் எண்கள் பதிவு செய்யப்பட்டு, உடனுக்குடன் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஊராட்சி தலைவர் ராஜலட்சுமி தேவராஜன், சூலூர் வட்டார சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் பழனிசாமி மற்றும் ஆய்வாளர்கள் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X