விவசாயிகள் பந்த்: பெரும் ஆதரவு இல்லை: டில்லியில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

Updated : செப் 27, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் விவசாய சங்கத்தினர் போராடி வருகின்றனர். பல கட்ட போராட்டங்களில் இன்று பாரத் பந்த் என விவசாய சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் இந்த போராட்ட அழைப்புக்கு ஆதரவு இல்லை.வேளாண் சட்டம் சிலருக்கு சாதகமாக இருப்பதாக விவசாய சங்க

புதுடில்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் விவசாய சங்கத்தினர் போராடி வருகின்றனர். பல கட்ட போராட்டங்களில் இன்று பாரத் பந்த் என விவசாய சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் இந்த போராட்ட அழைப்புக்கு ஆதரவு இல்லை.



latest tamil news



வேளாண் சட்டம் சிலருக்கு சாதகமாக இருப்பதாக விவசாய சங்க அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன. அதே நேரத்தில் இது விவசாயிகளுக்கு நலன் தரும் சட்டம் என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விவசாயிகளின் போராட்டம் பல மாதங்களாக தொடர்ந்து வருகிறது.


latest tamil news



இன்றைய நாடு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். நாட்டில் உள்ள எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. உ பி.,யில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ்கட்சி, பஞ்சாபில் சில கட்சியினர், விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
டில்லி, பஞ்சாப், ஹரியானாவில் ஓரளவுக்கு ஆதரவு உள்ளது. டில்லியில் கூடுதல் பாதுகாப்பு போலீசார் ரோந்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



டில்லியில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு


விவசாயிகள் போராட்டம் காரணமாக டில்லி நகருக்குள் வரும் வாகனங்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் சில முக்கிய சாலைகளில் விவசாயிகள் மறியல் நடத்தியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் டில்லியில் இருந்து உ.பி., ஹரியானா செல்லும் முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பரவலாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.


latest tamil news



தமிழகத்தை பொறுத்தவரை இடதுசாரிகள், மக்கள் நீதி மய்யம் கட்சி தவிர எந்த கட்சியினரும் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை. இடதுசாரி தரப்பில் ரயில் மறியல் ஆர்பாட்டம் என போராட்டம் நடத்தி வருகின்றனர். கடைகள் எதுவும் தமிழகத்தில் அடைக்கப்படவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - ottawa,கனடா
27-செப்-202122:05:45 IST Report Abuse
Ram இவர்கள் அவர்கள் உருவாகும் பொருளுக்கு விவசாயிகள், இந்தியாவின் மாற்றப்பகுதியில் இருந்து பொருட்களை எடுத்து சென்று வடஇந்தியாவில் விற்கும் இடைத்தரகர்கள்... அவர்களுக்கு இடைத்தரகர் வேலையில் விவசாயத்தை விட லாபம் அதிகம் என்று தெரிந்திருக்கிறது, அதனாலதான் இந்த போராட்டம். அரசு எல்லா விவசாயிகளுக்கும் நன்மை கிடைக்க யார் வேண்டுமானாகிலும் இந்தையாவில் எந்த மூலையிலும் விவசாய பொருட்களை விற்கலாம் என்கிறது, அப்போது இந்த வடஇந்திய விவசாய இடைத்தரகர்களுக்கு பிரச்னை என்பதால் ... இப்படி விவசாய போராட்டம் என்று சப்பைக்கட்டு காட்டுகின்றனர்
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
27-செப்-202121:02:17 IST Report Abuse
Dhurvesh விவசாயிகள் பந்த்: பெரும் ஆதரவு இல்லை: அப்புறம் எப்படி டில்லியில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
Rate this:
Soumya - Trichy,இந்தியா
27-செப்-202121:58:17 IST Report Abuse
Soumyaஉன்னை போன்ற கேடுகெட்ட மூர்க்கனுக்கு ஆதாரம் காட்டணுமோ...
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
27-செப்-202120:00:16 IST Report Abuse
Poongavoor Raghupathy ஒன்று இந்த விவசாயிகள் போராட்டத்தில் பாராட்ட பட வேண்டும். பல நாட்கள் போராட்டம் நடத்துகிறார்கள். எவ்வளவு நாட்கள் வேலையே விட்டுவிட்டு போராட்டம் சாதாரண ஏழை விவசாயிகளால் போராட முடியும். இந்த போராட்டத்தில் பெரிய உண்மை வெளியே வரவில்லை.இந்த போராட்டம் நிசசயம் ஏழைகல் கட்டாயம் நடத்த வாய்ப்பு இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X