பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு: ஹிந்து முன்னணி தலைவர் குற்றச்சாட்டு

Added : செப் 27, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:''தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. போலீஸ், உளவு துறை விழிப்போடு இருக்காவிட்டால் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும்,'' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறினார்.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ஹிந்து முன்னணி மேற்கு நகர தலைவர் சந்திரசேகர், மர்ம நபர்களால் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார். இதனால் நகரில்
 தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு: ஹிந்து முன்னணி தலைவர் குற்றச்சாட்டு

மேட்டுப்பாளையம்:''தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. போலீஸ், உளவு துறை விழிப்போடு இருக்காவிட்டால் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும்,'' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறினார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ஹிந்து முன்னணி மேற்கு நகர தலைவர் சந்திரசேகர், மர்ம நபர்களால் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார். இதனால் நகரில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது.மேட்டுப்பாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சந்திரசேகரை, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக போகிறது. தென் மாவட்டங்களில், சில இடங்களில் பழிவாங்கும் கொலைகள் நடக்கின்றன. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், பயங்கரவாதிகளுக்கு, நம்ம ஆட்சிதான் நடக்கிறது என்ற எண்ணம் உள்ளது.
போலீஸ், உளவுத்துறை சரியாக செயல்படாமல் போனால், தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும். நிறைய இடங்களில் இது மாதிரி தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. குறிப்பாக, வங்கதேசத்தவர் சிலரும் இதன் பின்னணியில் உள்ளதாக தெரியவந்துள்ளது.சந்திரசேகரை தாக்கியவர்களை, போலீசார் உடனே கைது செய்ய வேண்டும். மேட்டுப்பாளையத்தில் கூடுதலாக ஒரு போலீஸ் ஸ்டேஷன் அமைத்து, போலீசார் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.ஹிந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர்குமார், கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் சதீஷ் குமார் உட்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X