சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் டெண்டர் முறைகேடு

Added : செப் 27, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாநகராட்சியில் ரூ.346 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரித்ததை தொடர்ந்து, பொறியாளர் லட்சுமணன், உதவி நிர்வாக பொறியாளர் சரவணக்குமார் ஆகியோர் பணியில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டனர்.மூன்று அதிகாரிகள் வெவ்வேறு நகரங்களுக்கு மாற்றப்பட்டனர்.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், கோவை மாநகராட்சியில், ரூ.346 கோடிக்கு டெண்டர் முறைகேடு நடந்திருப்பதாக,

கோவை:கோவை மாநகராட்சியில் ரூ.346 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரித்ததை தொடர்ந்து, பொறியாளர் லட்சுமணன், உதவி நிர்வாக பொறியாளர் சரவணக்குமார் ஆகியோர் பணியில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டனர்.மூன்று அதிகாரிகள் வெவ்வேறு நகரங்களுக்கு மாற்றப்பட்டனர்.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், கோவை மாநகராட்சியில், ரூ.346 கோடிக்கு டெண்டர் முறைகேடு நடந்திருப்பதாக, லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் வேலுமணி, அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகள், அலுவலகங்களில் சோதனை செய்தனர்.அப்போது, மாநகராட்சியில் இதற்கு முன் துணை கமிஷனர்களாக பணியாற்றிய காந்திமதி, மதுராந்தகி, நகர பொறியாளர் லட்சுமணன், உதவி நிர்வாக பொறியாளர் சரவணக்குமார் ஆகியோரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.மாநகராட்சி பதிவேடுகளை ஆய்வு செய்தபோது, 12 நிறுவனங்களுக்கு, 697 கோடி ரூபாய், மாநகராட்சியில் இருந்து வழங்கியிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. பொறியியல் பிரிவு அதிகாரிகள் துணையின்றி, டெண்டர் முறைகேடு செய்திருக்க வாய்ப்பில்லை என்கிற கருத்து எழுந்ததால், சென்னை லஞ்ச ஒழிப்பு துறையினர் நேரடி விசாரணைக்கு கோவை வந்தனர்.நகர பொறியாளர் லட்சுமணன், நிர்வாக பொறியாளர்கள் பார்வதி, ஞானவேல், ரவிச்சந்திரன் மற்றும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்த சரவணக்குமார் உள்ளிட்டோரிடம் தனித்தனியாக விசாரித்தனர்.ஒரு வார இடைவெளிக்கு பின், மீண்டும் கோவை வந்த லஞ்ச ஒழிப்பு துறையினர், உதவி நிர்வாக பொறியாளர்கள், உதவி, இளம் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்களிடம் விசாரணை நடத்தினர்.இச்சூழலில், நகர பொறியாளர் லட்சுமணன், உதவி நிர்வாக பொறியாளர் சரவணக்குமார் ஆகிய இருவரும் நேற்று பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மாற்றுப்பணியிடம் வழங்கப்படவில்லை.நிர்வாக பொறியாளர் பார்வதி, வேலுார் மாநகராட்சி பாதாள சாக்கடை திட்ட பணிக்கும், ஞானவேல் ஈரோடு மாநகராட்சிக்கும், ரவிச்சந்திரன், மதுரை மாநகராட்சி ஜே.என்.என்.யு.ஆர்.எம்., பிரிவுக்கும் மாற்றப்பட்டனர்.இம்மாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக. தமிழக அரசு உத்தரவிட்டதால், அவர்களை, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் நேற்று விடுவித்து உத்தரவிட்டார்.'சஸ்பெண்ட்' வாய்ப்புமாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'நகர பொறியாளர் லட்சுமணன் மற்றும் உதவி நிர்வாக பொறியாளர் சரவணக்குமார் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்திருக்கின்றனர். முறைகேடு செய்திருப்பதாக சொல்லப்படும் டெண்டர் கோப்புகளில் இவ்விருவரும் கையெழுத்திட்டிருக்கின்றனர். அடுத்தடுத்த விசாரணைக்கு ஆஜராக வேண்டியிருக்கும் என்பதால், துறை ரீதியான நடவடிக்கையாக, சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருக்கிறது' என்றனர்.ஏற்கனவே சிக்கியவர்கள்!மாநகராட்சி கமிஷனராக லதா பணியாற்றியபோது, வெள்ளலுார் கிடங்கில் மக்கும் குப்பையில் உரம் தயாரிக்கும் திட்டத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில், லட்சுமணன் துாத்துக்குடிக்கும், சரவணக்குமார் சென்னைக்கும் மாற்றப்பட்டனர். அ.தி.மு.க., ஆட்சியின் போது,இவ்விரு அதிகாரிகளும் கோவைக்கு திரும்பி வந்தனர். இவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் ஒதுக்கி, 'டெண்டரில்' முறைகேடு செய்திருப்பதாக, மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X