இதை யாரும் கேட்கவில்லை. கேட்டால், நம் முதல்வர் கொடுத்து விடுவார்

Updated : செப் 27, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவம், இன்ஜினியரிங் கல்விக்கு, 7.5 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும், ஏழை குழந்தைகள் பெரும்பாலானோர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில்கின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு எவ்வித இட ஒதுக்கீடும் அளிக்காதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.- நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
இதை யாரும் கேட்கவில்லை. கேட்டால், நம் முதல்வர் கொடுத்து விடுவார்

அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவம், இன்ஜினியரிங் கல்விக்கு, 7.5 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும், ஏழை குழந்தைகள் பெரும்பாலானோர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில்கின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு எவ்வித இட ஒதுக்கீடும் அளிக்காதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
- நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்


'இதை யாரும் கேட்கவில்லை. கேட்டால், நம் முதல்வர் கொடுத்து விடுவார். அவர் கேட்பதையும் கொடுப்பார்; கேட்காததையும் கொடுப்பார்...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.ஒரு நாளைக்கு, 10 வீடுகளில் உள்ளவர்களை தொண்டர்கள் சந்தித்து, ஓட்டு சேகரிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் தான் சட்டசபையில், அ.தி.மு.க.,வுக்கு மதிப்பு கூடும்.
- அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் முனுசாமி


'அப்போ, உள்ளாட்சி தேர்தல், அ.தி.மு.க.,வுக்கு அக்னிப்பரீட்சை என சொல்லுங்கள்...' என, கூறத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் முனுசாமி பேச்சு.இந்தியாவில், கொரோனாவின் இரண்டவது அலை இன்னும் முடியவில்லை என, மத்திய சுகாதாரச் செயலர் கூறியிருக்கிறார். எனவே, மக்கள் விழிப்புணர்வோடு செயல்படுவது மட்டுமல்லாமல், மத்திய, மாநில அரசுகளின் கொரோனா நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
- த.மா.கா., தலைவர் வாசன்


'எங்கே சார் பின்பற்றுகின்றனர்... எங்கு பார்த்தாலும் கூட்டமாகத் தான் இருக்கின்றனர். சமூக இடைவெளி போன்ற நெறிமுறைகளை தலைவர்களே பின்பற்றுவதில்லை...' என, சொல்லத் தோன்றும் வகையில், த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை.'நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி., அல்ல; தி.மு.க., எம்.பி.,' என நீதிமன்றத்தில் கூறிய ரவிகுமார் கலந்து கொள்ளும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிகழ்ச்சிகளில் அவர், வி.சி.,யை சேர்ந்தவர் என்றே குறிப்பிடப்படுகிறது. இது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா?
- தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி


latest tamil news
'இது தி.மு.க.,வுக்கும், வி.சி.,க்களுக்கும் உள்ள பிரச்னை; பா.ஜ.,வுக்கு தேவையில்லாதது...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.டில்லியில் நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் ஆலைகள் மற்றும் பிற காரணங்களால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்பட்டுள்ளது. இதனால் தினமும் டில்லி மூச்சு திணறுகிறது. இதை அறியாமல், தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளார் முதல்வர் கெஜ்ரிவால். காரணம் பட்டாசு தயாரிப்பாளர்கள் குரல் டில்லியில் எடுபடுவதில்லை.
- விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர்


'உண்மை தானே... பழைய வாகனங்களை எல்லாம் ஓடக்கூடாது என நிறுத்தி விட்டார். புகை கக்கும் ஆலைகளை நிறுத்த முன்வரவில்லை...' என, சொல்லத் துாண்டும் வகையில், விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர் அறிக்கை.


Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arachi - Chennai,இந்தியா
27-செப்-202119:05:20 IST Report Abuse
Arachi அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மிகைத்திறமையான ஆசிரியர்கள். Highly qualified கற்பித்தல் திறனும் அதிகம் இருக்கும். ஏனென்றால் பலவகை கற்றல் கற்பித்தல் திறன்களுக்கான பயிற்சிகளையும் அவர்கள்தான் பெறுகிறார்கள் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் உட்பட. எங்கே குறை இருக்கிறது என்றால் பாடத்தை நடத்துவார்கள் சிறப்பாக நடத்துவார்கள்.ஆனால் மாணவர்களுடைய கற்றல் திறனை மேம்படுத்த result க்காக பாடு படும் பள்ளிகள் போன்று கோச்சிங் கொடுப்பதில் தேக்கம் இருக்கும். Quality of teaching ல் எந்த குறையும் இருக்காது. I admire the teaching of the plus II teachers of government schools and highly qualified they are all. Only lacuna is lack of coaching not as equal to self financing schools Self financing schools have four objectives 1 More coaching 2 More result if possible state level ranks 3 therefore more admission 4 More money or minting money Government schools in USA are excellent and highly sophisticated and free education with lunch in all schools நம்மாலும் முடியும்
Rate this:
Cancel
Arachi - Chennai,இந்தியா
27-செப்-202118:18:35 IST Report Abuse
Arachi சீமான் ஒரு அரசியல் காமெடியன். அவருடைய அரசியல் கொள்கைகளில் அவருக்கே தெளிவில்லை. ஒவ்வொரு மேடையிலும் ஒவ்வொரு விதமாக பேசுகிறார். தமிழ் மக்கள் பொதுவாக உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். இவரை மாதிரியே கன்னியாகுமாரி மாவட்டத்தில் பூமேடை ராமசாமியென்று ஒரு அரசியல் வாதி இருந்தார்.உரக்கப்பேசுவர் காமெடியாக பேசுவார். இவர் பேசுகிறார் என்றால் அவ்வளவு கூட்டம் வரும். எல்லா எலக்ஷனிலும் நிற்பார் அனல் பறக்கும். ஆனால் ஒரு தேர்தலில் கூட செயிச்சதில்லை.அவருக்குப்பின் இவர்தான் அரசியல் காமெடியன் இவரைப்பார்க்கிறேன். இவர் பேசிவிட்டு இவரே சிரித்துக்கொள்கிறார்.ஆட்சிக்கு வந்தால் ஒரே வெட்டு என்று பேசுகிறார். என்ன அரசியலோ
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
27-செப்-202116:43:17 IST Report Abuse
r.sundaram யார் தப்பு செய்தாலும் தட்டிகேப்பது நல்லதுதானே? நீதிமன்றத்தில் ஒன்றை சொல்லிவிட்டு அதற்க்கு மாறாக வெளியில் நடந்தால்? இது குறித்து நீதி மன்றம் தானாக முன் வந்து வழக்கு தொடுக்குமா? ஆதலால் நீதி மன்றங்களில் கவனத்துக்கு அதை கொண்டு சொல்ல இதுதான் வழி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X