பொது செய்தி

தமிழ்நாடு

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் தேங்காய் நீர் பிரசாதம் வழங்கும் திட்டம் துவக்கம்

Updated : செப் 27, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
தஞ்சாவூர்: இந்தியாவிலேயே முதன்முறையாக பிரசித்திபெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு தேங்காய் தண்ணீர் பிரசாதமாக வழங்கும் கருவியை மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தொடங்கி வைத்தார்.தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் உடைக்கப்படும் தேங்காயிலிருந்து வெளியாகும் தண்ணீர் வீணாவதை தடுக்கும் விதமாக, இந்திய உணவு பதன

தஞ்சாவூர்: இந்தியாவிலேயே முதன்முறையாக பிரசித்திபெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு தேங்காய் தண்ணீர் பிரசாதமாக வழங்கும் கருவியை மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தொடங்கி வைத்தார்.latest tamil news


தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் உடைக்கப்படும் தேங்காயிலிருந்து வெளியாகும் தண்ணீர் வீணாவதை தடுக்கும் விதமாக, இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகம் சார்பில், வீணாகும் தேங்காய் தண்ணீரை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும் நவீன கருவி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இதனை மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழிற்சாலைகள் மற்றும் நீர்வளத்துறை துறை மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்திய உணவு பயிர் பதன கழக இயக்குனர் அனந்த ராமகிருஷ்ணன், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, இந்து சமய அறநிலையத் துறை உதவி கமிஷனர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


latest tamil news


கோவிலில் நேர்த்திக்கடனாக உடைக்கப்படும் தேங்காயில் இருந்து வெளியேறும் தண்ணீரை சுத்திகரித்து பக்தர்களுக்கு வழங்கப்படும். இந்தியாவிலேயே முதல்முறையாக இந்தக் கருவி புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ஏழு லட்சம் ரூபாய். இதில், தேங்காய் தண்ணீரை சுத்திகரித்து, 50 லிட்டர் வரை நீரை சேமித்து வைத்து பக்தர்களுக்கு வழங்கப்படும் என இந்திய உணவு பதன கழகம் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
27-செப்-202116:02:26 IST Report Abuse
DVRR அய்யகோ இதில் (சேகர்) பாபர் ஹுமாயூன் இல்லையே என்ன கொடுமை இது அறநிலையத்துறை செய்வது இது அடுக்காது என்ன விடியல் அரசே ஒன்னும் சொல்லல்லையா இன்னும். திட்டுதல்-யாருக்கு என்ன தோணுகின்றதோ அப்படி எடுத்துக்கொள்ளலாம்???
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
27-செப்-202115:50:25 IST Report Abuse
Vena Suna மத்திய அரசு செய்வதா? அப்படி என்றால் அருமை.
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
27-செப்-202115:20:29 IST Report Abuse
தமிழ்வேள் இளநீர் என்பது சுத்தமான நீர்தான் ....தேங்காய் நார் ,மற்றும் தூசி , தேங்காயிலிருந்து வெளிவந்தபின்னரே நீரில் படிக்கிறது ..எனவே சாதாரண டீ வடிகட்டும் பில்டரில் வடிகட்டினால் போதுமானது . எனது இளமைக்காலத்தில் வீட்டின் அருகிலிருந்த ஆஞ்சநேயர் கோவிலின் அர்ச்சகர் இதைத்தான் செய்வார் ..தேங்காய் உடைக்கும்போது இளநீரை வீணாக்காமல் ஒரு பாத்திரத்தில் சேமித்து வடிகட்டியபின் , அதோடு துளசி தளங்கள் ,அனுமாருக்கு சார்த்திய வெண்ணையை திரட்டி எடுத்து சிறு உருண்டைகளாக்கி இளநீரில் இட்டு ,பின் அதை தீர்த்தமாக சேவார்த்திகளுக்கு தருவார் ...இளநீர் துளசி தளத்தின் சுவையோடு சிறிய அளவு வெண்ணெய் சேர்ந்து கிடைக்கும் இனிய நறுமணத்தோடு கூடிய சுவையான தீர்த்தம் சிறிய குழந்தைகளை ஹனுமார் கோவிலின் நிரந்தர சேவார்த்திகள் மற்றும் பக்தர்கள் ஆக்கியது - என்றால் அது மிகையல்ல ... மேலும் கோவில்களில் நாட்டு சர்க்கரையில் ,பொட்டுக்கடலை மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து சிறிய அளவு பிரசாதமாகவும் வழங்கலாம் ...40 , 50 ஆண்டுகளுக்கு முன்பு பல சிறிய கோவில்களில் இப்படிப்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது .இதை பெரிய கோவில்களிலும் ,உப சந்நிதிகளில் செயல்படுத்தலாம் .
Rate this:
Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
27-செப்-202121:54:06 IST Report Abuse
Saravananஉண்மையில் நீங்கள் கொடுத்து வைத்தவர் அநேகமாக இதெற்கெல்லாம் நாம் தான் கடைசி சாட்சியாக இருப்போம் போலிருக்கு "வீட்டின் அருகிலிருந்த ஆஞ்சநேயர் கோவிலின் அர்ச்சகர் இதைத்தான் செய்வார் ..தேங்காய் உடைக்கும்போது இளநீரை வீணாக்காமல் ஒரு பாத்திரத்தில் சேமித்து வடிகட்டியபின் , அதோடு துளசி தளங்கள் ,அனுமாருக்கு சார்த்திய வெண்ணையை திரட்டி எடுத்து சிறு உருண்டைகளாக்கி இளநீரில் இட்டு ,பின் அதை தீர்த்தமாக சேவார்த்திகளுக்கு தருவார் ... இளநீர் துளசி தளத்தின் சுவையோடு சிறிய அளவு வெண்ணெய் சேர்ந்து கிடைக்கும் இனிய நறுமணத்தோடு கூடிய சுவையான தீர்த்தம் சிறிய குழந்தைகளை ஹனுமார் கோவிலின் நிரந்தர சேவார்த்திகள் மற்றும் பக்தர்கள் ஆக்கியது - என்றால் அது மிகையல்ல"...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X