இந்தியர்களுக்கு விசா வழங்க சீனா மறுப்பு: அறிவியலுக்கு பொருந்தாத அணுகுமுறை என இந்தியா எதிர்ப்பு

Updated : செப் 27, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (35)
Advertisement
பீஜிங்: 'கடந்த 18 மாதங்களாக இந்தியர்களுக்கு விசா வழங்க மறுப்பது, சீனாவின் அறிவியலுக்கு பொருந்தாத அணுகுமுறை' என, சீனாவுக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.சீனாவின் வூஹான் மாகாணத்தில் தான் முதன்முதலில் கோவிட் வைரஸ் பரவத் தொடங்கியது. இதையடுத்து சீனாவில் தங்கிப் படித்து வந்த 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களும், நூற்றுக்கணக்கான தொழிலதிபர்களும், தொழிலாளர்களும்

பீஜிங்: 'கடந்த 18 மாதங்களாக இந்தியர்களுக்கு விசா வழங்க மறுப்பது, சீனாவின் அறிவியலுக்கு பொருந்தாத அணுகுமுறை' என, சீனாவுக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.


latest tamil newsசீனாவின் வூஹான் மாகாணத்தில் தான் முதன்முதலில் கோவிட் வைரஸ் பரவத் தொடங்கியது. இதையடுத்து சீனாவில் தங்கிப் படித்து வந்த 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களும், நூற்றுக்கணக்கான தொழிலதிபர்களும், தொழிலாளர்களும் இந்தியா திரும்பினர். இந்தியாவில் கோவிட் அலை வீசத் தொடங்கியதும், அதைக் காரணம் காட்டி, இந்தியாவில் இருந்து சீனாவுக்கான விமான சேவைக்கு சீனா அரசு தடை விதித்தது; இந்தியர்களுக்கு விசா வழங்குவதையும் நிறுத்தியது.latest tamil newsஇந்நிலையில், இந்தியா - சீனா உறவுகள் தொடர்பான 4வது உயர்மட்ட பேச்சுவார்த்தை காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. அதில், சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி பேசுகையில், 'இந்திய மாணவர்கள், தொழிலதிபர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் ஆகியோர் சீனாவுக்கு திரும்புவது இருதரப்பு தூதரக நிலைப்பாடு சாராத, மனிதாபிமான பிரச்னை. அவர்கள் 18 மாதங்களாக இந்தியாவில் தவித்து வருகிறார்கள். தற்போதைய கருத்து வேறுபாடுகளை பொருட்படுத்தாமல், வர்த்தக உறவை இந்தியா கடைபிடித்து வருகிறது. உதாரணமாக, சீன தொழிலதிபர்கள் இந்தியா வர தொடர்ந்து விசா வழங்கப்படுகிறது. இந்தியர்கள் சந்தித்து வரும் பிரச்சனையில் அறிவியலுக்கு பொருந்தாத அணுகுமுறையை சீனா பின்பற்றுவது ஏமாற்றம் அளிக்கிறது' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dominic - mumbai,இந்தியா
28-செப்-202101:02:48 IST Report Abuse
Dominic China z technically advanced countr Their progress & ideas can't b competed. Our hue & cry will not b answer to this problem. Our standard z too low, our politics to de grade China z a utter failure., only through good friship we can live success with peace& harmony
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
27-செப்-202123:47:59 IST Report Abuse
jagan சீன பாகங்கள் இல்லாமல் எதுவும் நடக்காது. TATA மஹிந்திரா கார் முதல் செல் போன் தயாரிப்பு வரை. இது அசெம்பிள் இன் இந்தியா தான் இன்னும். நாம் திறமையை மதிக்காமல் பொரியல் பட்டதாரி என்ற பெயரில் ஒரு பப்பேர் தான் கொடுக்குறோம். எல்லாம் இட ஒதுக்கீடு கேஸுக. சொந்தமா சிந்திக்கும் திறன் குறைவு. LGK UKG டியூஷன் எடுக்க கூட லாயக்கவில்லை. திறமை உள்ளவன் உழைப்பவன் வெளிநாடு போய் விட்டார்கள் (வளைகுடா வெளிநாட்டோடு சேராது. அங்கெல்லாம் 99% கேக்குறான் அண்ட் மேக்றான் வேலை தான்)
Rate this:
Cancel
27-செப்-202120:30:41 IST Report Abuse
அப்புசாமி இதுலேருந்து என்ன தெரியுது? நமக்குதான் சீனாவின் தயவு வேணும். அவிங்களுக்கு நம்ம தயவு வாணாம். ஆத்மநிர்பரா கி அந்தர் சீனா சே இறக்குமதி படாயேங்கே.. அதான் அறிவியல் ஹைன். காங்கிரஸ்தான் சீன அடிமை ஹைன். நாங்க சுத்த வீரர்கள் ஹைன். குவாட் நாடுங்க நாலும் இதே நிலைமையில் இருக்கோம் ஹைன். சீனாவை எப்படியாவது ஒடுக்குவோம் ஹைன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X