அரசியல் செய்தி

தமிழ்நாடு

என் தொடர்பான புகார்களை என்னிடமே கேளுங்கள்: அமைச்சர் செந்தில்பாலாஜி

Updated : செப் 27, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
சென்னை: ‛‛என் தொடர்பான புகார்களை என்னிடமே கேளுங்கள்,'' என, தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.சேகர் ரெட்டியின் டைரி விவகாரத்தில் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி என 14 பேருக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகின. அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து,
Senthil Balaji, Minister, DMK, Sekar Reddy, செந்தில் பாலாஜி, மின்சாரத்துறை, அமைச்சர், திமுக, சேகர் ரெட்டி, புகார்கள்

சென்னை: ‛‛என் தொடர்பான புகார்களை என்னிடமே கேளுங்கள்,'' என, தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

சேகர் ரெட்டியின் டைரி விவகாரத்தில் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி என 14 பேருக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகின. அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து, தி.மு.க.,வில் இணைந்து தற்போது மின்துறை அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.


latest tamil news


இது தொடர்பாக அவர் கூறியதாவது: சேகர் ரெட்டியின் டைரியில் என்னுடைய பெயர் இல்லை. எனக்கு நோட்டீஸ் எதுவும் வரவில்லை. எனது பெயர் உள்ளது எனக் கூறுபவர்கள் அதை நிரூபிக்க வேண்டும். என் தொடர்பான புகார்களை என்னிடமே கேளுங்கள். மின் நுகர்வோர் சேவை மையத்திற்கு கடந்த 100 நாட்களில் 3.53 லட்சம் புகார்களில் 3.50 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. மின்கட்டணம் தொடர்பாக இதுவரை 14.69 லட்சம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

கடந்த 4 மாதங்களில் மின்சார துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அ.தி.மு.க., ஆட்சியில் மின்மிகை மாநிலமாக தமிழகம் உள்ளதாக கூறியது உண்மை இல்லை. மொத்தம் 56,000 காலிப் பணியிடங்கள் மின் வாரியத்தில் உள்ளன. எந்த பணியிடங்கள் அவசரம், அவசியம் என்று ஆய்வு செய்து காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
28-செப்-202101:49:36 IST Report Abuse
meenakshisundaram என் வழக்குகளை நானே விசாரிக்கிறேன் .தீர்ப்பும் வழங்குவேன் -வேறே எவன் கிட்டேயும் போக வேண்டாம்
Rate this:
Cancel
Sathya -  ( Posted via: Dinamalar Android App )
27-செப்-202122:44:03 IST Report Abuse
Sathya Fraudulent Minister this Senthil Balaji
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
27-செப்-202121:55:11 IST Report Abuse
BASKAR TETCHANA உன்னை பற்றி உன்னிடமே நாங்கள் கேட்பதை விட உன் மனசாட்சியை நீயே கேள் அது தான் பொருத்தம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X