பொது செய்தி

இந்தியா

நாடு முழுதும் மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும் திட்டம்: பிரதமர் மோடி துவக்கி வைப்பு

Updated : செப் 27, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (41)
Share
Advertisement
புதுடில்லி: நாடு முழுவதும் மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் ஐடி, அடையாள அட்டை எண் உருவாக்கப்பட்டு அட்டை தரப்படும்.ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் மூன்றாவது ஆண்டை தேசிய சுகாதார ஆணையகம் கொண்டாடும் வேளையில், நாடு தழுவிய ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம்
PMModi, Ayushman Bharat Digital Mission, ABDM, NarendraModi, Digital, Hospitals, ஆயுஷ்மான் பாரத், பிரதமர் மோடி, டிஜிட்டல், மருத்துவம்

புதுடில்லி: நாடு முழுவதும் மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் ஐடி, அடையாள அட்டை எண் உருவாக்கப்பட்டு அட்டை தரப்படும்.

ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் மூன்றாவது ஆண்டை தேசிய சுகாதார ஆணையகம் கொண்டாடும் வேளையில், நாடு தழுவிய ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். நாடு முழுவதும் மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும் இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் ஐடி, அடையாள அட்டை எண் உருவாக்கப்பட்டு அட்டை தரப்படும்.


latest tamil news


நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று மிக முக்கியமான நாள். இத்திட்டம் கடந்த 7 ஆண்டுகளில் நாட்டின் சுகாதார வசதிகளை வலுப்படுத்தும் புதிய கட்டத்திற்குள் நுழைகிறது. இது சாதாரணமானது அல்ல. இந்தியாவின் சுகாதார வசதிகளில் ஒரு புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவரும் சக்தி கொண்ட திட்டம் துவக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளில், ஆயுஷ்மான் பாரத் யோஜனா செயல்படுத்தப்பட்டது. ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம் இன்று முதல் நாடு முழுவதும் துவங்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


latest tamil news


இலவச தடுப்பூசி இயக்கத்தின் மூலம், இந்தியா சுமார் 90 கோடி தடுப்பூசி மருந்துகளை வழங்கி சாதனை புரிந்துள்ளது. அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சாதனைக்கு கோவின் தளமும் முக்கிய பங்காற்றியுள்ளது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மருத்துவ சிகிச்சையில் உள்ள சிக்கல்களை நீக்குவதில் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் பெரும் பங்கு வகிக்கும். நாடு முழுவதும் ஆயுஷ்மான் பாரத் விரிவுபடுத்தப்பட்டு வலுவான தொழில்நுட்பத் தளத்தால் வழங்கப்படுகிறது.

நாட்டின் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கொரோனா நோயாளிகளுக்கு தடுப்பூசி போடுவதோ அல்லது சிகிச்சை அளிப்பதோ, அவர்களின் முயற்சிகள் தேசத்திற்கு மிகப்பெரிய நிவாரணம் அளித்தது. மேலும், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உதவியது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G. Madeswaran - MA,யூ.எஸ்.ஏ
27-செப்-202121:53:22 IST Report Abuse
G. Madeswaran மிக நல்ல மக்களுக்கு பயனுள்ள திட்டம். Based on income everyone contribute to healthcare and it will huge single fund. This can very good healthcare tem thought the country uniformly and keeps good our own medical history whenever visiting to hospital and for related money claims etc. Sick, rich, poor all can be benefitted, Very good initiative by Govt. of India and our dynamic PM Modi. No worry about data theft and all. its like Aadhar card for healthcare ID for each individual.
Rate this:
Cancel
G. Madeswaran - MA,யூ.எஸ்.ஏ
27-செப்-202121:46:30 IST Report Abuse
G. Madeswaran மிக nalla
Rate this:
Cancel
Raj - nellai,பஹ்ரைன்
27-செப்-202119:40:36 IST Report Abuse
Raj தேவையில்லாத ஆணி இதும்
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
27-செப்-202120:33:04 IST Report Abuse
Visu Iyerஇது மட்டுமா.. மோடி ஜி தலைமையிலான ஆட்சியே இந்தியாவுக்கு வேண்டாதது என்பதை உலகே சொல்லுமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X