பொது செய்தி

இந்தியா

வலுவிழந்தது 'குலாப்' புயல்

Updated : செப் 27, 2021 | Added : செப் 27, 2021
Share
Advertisement
புதுடில்லி: கிழக்கு மத்திய வங்கக் கடலில் உருவான 'குலாப்' புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளதாவது: வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த 'குலாப்' புயல் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளில் நேற்று (செப்., 26) இரவு

புதுடில்லி: கிழக்கு மத்திய வங்கக் கடலில் உருவான 'குலாப்' புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



latest tamil news



இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளதாவது: வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த 'குலாப்' புயல் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளில் நேற்று (செப்., 26) இரவு கரையை கடந்தது. இதனால், கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அதன்பின், ஒடிசாவின் கோராபுட் மாவட்ட கடல் பகுதிக்குள் புயல் நுழைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. கடந்த 6 மணி நேரமாக இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.இன்று அதிகாலையில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திராவில் நிலைகொண்டிருந்தது. தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்.


latest tamil news




தமிழகத்தில் கனமழை


புயலால் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் ஏற்பட்டுள்ளது. இதனால், இன்று தமிழகத்தின் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாளை, நாளை மறுதினம் தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், மிதமான மழையும் பெய்யும். இவ்வாறு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X