பவானியில் திருக்கோயில் தொழிலாளர் மண்டல கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பவானியில் திருக்கோயில் தொழிலாளர் மண்டல கூட்டம்

Added : செப் 27, 2021
Share
பவானி: தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர் மண்டல கூட்டம் பவானியில் நடந்தது. யூனியன் தலைவர் இதயராஜன் தலைமை வகித்தார். திருக்கோவில் பணியாளர், ?,500 பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவதாக அறிவித்த, தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட பணியிடத்தில் பணிபுரியவில்லை என்ற காரணத்தை கூறி, கோவில் பணியாளர்களுக்கு சம்பளம்

பவானி: தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர் மண்டல கூட்டம் பவானியில் நடந்தது. யூனியன் தலைவர் இதயராஜன் தலைமை வகித்தார். திருக்கோவில் பணியாளர், ?,500 பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவதாக அறிவித்த, தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட பணியிடத்தில் பணிபுரியவில்லை என்ற காரணத்தை கூறி, கோவில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. இவர்களுக்குரிய ஊதியத்தை வழங்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையில் தகுதி அடிப்படையில், புது அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர். உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் ராமதுரை, பூலுச்சாமி, மாநில துணை தலைவர்கள் சிவகுமார், குருராஜன், செயலாளர் ஆனந்தன், மாநில துணை அமைப்பாளர் நந்தகோபால், கணபதி, கோவை மண்டல தலைவர் சேஷையா, நாமக்கல் மாவட்ட செயலர் மதியழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X