பொது செய்தி

தமிழ்நாடு

யார் கட்டுப்பாட்டில் காவல்துறை உள்ளது? பகுஜன் சமாஜ் கேள்வி

Added : செப் 27, 2021
Share
Advertisement
ஈரோடு: பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டார். கூட்டத்துக்குப் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. தி.மு.க., கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினரையே, சேலத்தில் போலீசார் தடுத்து

ஈரோடு: பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டார். கூட்டத்துக்குப் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. தி.மு.க., கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினரையே, சேலத்தில் போலீசார் தடுத்து நிறுத்தி, தடியடி நடத்தியுள்ளனர். தமிழக காவல்துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்று தெரியவில்லை. நிகழ்ச்சியை நடத்துவதற்கு கூட போலீசார் அனுமதிக்கவில்லை. கட்சி கொடியை ஏற்றுவது அடிப்படை உரிமை. இதற்கும் தடை சொன்னால் எப்படி? தமிழக காவல்துறைக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X