சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'அப்பாச்சி'யில் வந்து ஆடு திருட முயற்சி; சத்தி அருகே சிக்கிய இளசுகள்

Added : செப் 27, 2021
Share
Advertisement
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே அப்பாச்சி பைக்கில் வந்து ஆடு திருடி தப்பிய இருவரை, மக்கள் மடக்கிப்பிடித்தனர். சத்தியமங்கலம் அருகே பெரியகுளத்தை சேர்ந்தவர் வடிவேல், 47; தோட்டத்தில், 10 ஆடுகள் வளர்த்து வருகிறார். சகோதரி சித்ரா நேற்று மதியம் தோட்டத்து சாலை முன்பு ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர், சோளத்தட்டு விலை குறித்து

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே அப்பாச்சி பைக்கில் வந்து ஆடு திருடி தப்பிய இருவரை, மக்கள் மடக்கிப்பிடித்தனர். சத்தியமங்கலம் அருகே பெரியகுளத்தை சேர்ந்தவர் வடிவேல், 47; தோட்டத்தில், 10 ஆடுகள் வளர்த்து வருகிறார். சகோதரி சித்ரா நேற்று மதியம் தோட்டத்து சாலை முன்பு ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர், சோளத்தட்டு விலை குறித்து அவரிடம் விசாரித்தனர். திடீரென ஒரு வெள்ளாட்டு கிடாயை தூக்கி வைத்துக்கொண்டு, பைக்கில் ஏறி தப்ப முயன்றனர். சித்ரா சத்தமிடவே அக்கம்பக்கத்தினர் கும்பலை சுற்றி வளைத்தனர். அப்போது இருவர் பைக்கில் தப்பி விட்டனர். அப்பாச்சி பைக்கில் வந்த இருவர் சிக்கினர். தர்ம அடி கொடுத்து, சத்தி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் வரதம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் வீதி ரஞ்சித்குமார், 25, சத்தி எம்.ஜி.ஆர்., நகர் மனோரஞ்சன் என தெரிந்தது. கிடாயை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர். சத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சத்தி கிளை சிறையில் அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X