பொது செய்தி

தமிழ்நாடு

செப்., 29ல் முதல்வர் தலைமையில் வரும் முன் காப்போம் திட்ட தொடக்க விழா

Added : செப் 27, 2021
Share
Advertisement
ஓமலூர்: சேலத்தில், 'வரும் முன் காப்போம்' திட்ட தொடக்க விழா, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், நாளை மறுநாள் நடக்க உள்ளது. தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட, 'வரும் முன் காப்போம்' மருத்துவ முகாம் திட்டத்தை, தற்போதை, தி.மு.க., அரசு மீண்டும் செயல்படுத்த உள்ளது. மாநில அளவிலான திட்டத்தை, வரும், 29ல் தொடங்கி வைக்க, சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஒன்றியம், நடுப்பட்டியில் உள்ள அரசு

ஓமலூர்: சேலத்தில், 'வரும் முன் காப்போம்' திட்ட தொடக்க விழா, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், நாளை மறுநாள் நடக்க உள்ளது. தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட, 'வரும் முன் காப்போம்' மருத்துவ முகாம் திட்டத்தை, தற்போதை, தி.மு.க., அரசு மீண்டும் செயல்படுத்த உள்ளது. மாநில அளவிலான திட்டத்தை, வரும், 29ல் தொடங்கி வைக்க, சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஒன்றியம், நடுப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தூய்மை பணி விறுவிறுப்பாக நடக்கிறது. அன்று காலை, முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம், சேலம் வரவுள்ளார். அங்கிருந்து நடுப்பட்டி சென்று, மருத்துவ முகாமை தொடங்கிவைத்துவிட்டு, சேலத்தில் உள்ள நிகழ்ச்சியை முடித்து, அன்றிரவு சேலத்தில் தங்கவுள்ளார். மறுநாள் தர்மபுரி செல்வார். இதனால், நேற்று காலை, கலெக்டர் கார்மேகம், நடுப்பட்டி பள்ளி வளாகத்தில் தூய்மை பணியை பார்வையிட்டார். வருவாய், மருத்துவம், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். ஆத்தூரிலும் வரும் முன் காப்போம் திட்ட விழா நடக்க உள்ளதால், அதுகுறித்த ஆலோசனை நடந்து வருகிறது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X