பொது செய்தி

தமிழ்நாடு

சங்ககிரி மலைக்கோட்டையை பாதுகாக்க கூடுதல் பணியாளர் நியமிக்க கோரிக்கை

Added : செப் 27, 2021
Share
Advertisement
சங்ககிரி: சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் சார்பில், இந்திய தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு அனுப்பிய மனு: சங்ககிரி மலைக்கோட்டை முன்புறம் உள்ள தேவையற்ற கற்களை அகற்றி, பள்ளத்தை மண் கொட்டி நிரப்பி, மக்கள் அமரும்படி இருக்கை அமைக்க வேண்டும். மலைக்கோட்டை நுழைவாயில் முதல் வரதராஜ பெருமாள் கோவில் வரை, கல் தரைத்தளம் அமைக்க வேண்டும். வரதராஜ பெருமாள் கோவில் முதல், சென்னகேசவ

சங்ககிரி: சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் சார்பில், இந்திய தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு அனுப்பிய மனு: சங்ககிரி மலைக்கோட்டை முன்புறம் உள்ள தேவையற்ற கற்களை அகற்றி, பள்ளத்தை மண் கொட்டி நிரப்பி, மக்கள் அமரும்படி இருக்கை அமைக்க வேண்டும். மலைக்கோட்டை நுழைவாயில் முதல் வரதராஜ பெருமாள் கோவில் வரை, கல் தரைத்தளம் அமைக்க வேண்டும். வரதராஜ பெருமாள் கோவில் முதல், சென்னகேசவ பெருமாள் கோவில் வரை படிக்கட்டுகளை சீரமைக்க வேண்டும். கோட்டை சுவர்கள், மண்டபங்களில் உள்ள செடி கொடிகளை அகற்றி, சிதிலமடைந்த சுவர்கள், மண்டபங்கள், குளங்களை புதுப்பிப்பது அவசியம். அடிவாரத்தில் பொது கழிப்பறை தேவை. 460 ஏக்கரில் உள்ள மலைக்கோட்டையை பராமரிக்க, பாதுகாக்க, தற்போது ஒரு மலைக்காவலர், ஒரு மலை பொறுப்பாளர் மட்டும் உள்ளனர். அங்குள்ள மரங்கள், கோட்டைகள், சுற்றுலா பயணியர் பாதுகாப்புக்கு அதிகளவில் பணியாளர்களை நியமிக்க வேண்டும். மலை உச்சி வரை மின்சாரம், குடிநீர் கொண்டு செல்ல வேண்டும். அனைத்து வசதிகளை செய்து தந்தால், சுற்றுலா தலமாக மாறும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X