நகர்புற உள்ளாட்சி தேர்தல்; 4 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க உத்தரவு

Added : செப் 27, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை 4 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என சில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது,
நகர்புற உள்ளாட்சி தேர்தல்; 4 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க உத்தரவு

சென்னை: தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை 4 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என சில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, மனுதாரரின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக கூறி செப்டம்பர் 15ம் தேதிக்குள் விடுபட்ட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலையும், டிசம்பர் 31ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கவும் இரண்டு மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து வரும் அக்.,6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி நடைபெறுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் ஆறு மாதகால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.


latest tamil news


அப்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடைந்து விடும். தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் கட்டாயம் வழங்க வேண்டும், என மாநில தேர்தல் ஆணையம் கோரியது. இதற்கு நீதிபதி, ‛தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் ஆணையம் சொல்லும் காரணங்கள் மிகவும் மோசமானதாக இருக்கிறது,' எனக் கூறி 4 மாதங்கள் வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
27-செப்-202118:05:48 IST Report Abuse
Nagarajan D காரணம் மோசமானதாக இருந்தால் தேர்தல் உடனே நடத்த வேண்டும் என உத்தரவு போட்டிருக்கலாம்
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
27-செப்-202117:41:00 IST Report Abuse
INDIAN Kumar எல்லா மத கடவுளையும் வழிபட மூன்று நாட்கள் தடை நடப்பது திமுக ஆட்சியா திக ஆட்சியா ???
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
27-செப்-202117:39:51 IST Report Abuse
INDIAN Kumar ஒன்பது மாவட்ட ஊராட்சி தேர்தல் முடிவுகள் பொறுத்தே அமையும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X