பொது செய்தி

தமிழ்நாடு

சிறுநீரகம் பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சைக்கு உத்தரவு

Added : செப் 27, 2021
Share
Advertisement
சேலம்: சிறுநீரகம் பாதிக்கப்பட்ட சேலம் சிறுமியின் சிகிச்சைக்கு உதவ, தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சேலம், அரிசிபாளையத்தில் வசிக்கும் ராஜநந்தினி மகள் ஜனனி, 16. பத்தாம் வகுப்பு மாணவியான இவர், வில்வித்தை, சிலம்பம் போட்டியில் மாநில அளவில் பரிசு பெற்றவர். ஒன்றரை ஆண்டுக்கு முன், இரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டதால், மாணவி கோவையில் அனுமதிக்கப்பட்டார். அவரது தாய் வழங்கிய ஒரு

சேலம்: சிறுநீரகம் பாதிக்கப்பட்ட சேலம் சிறுமியின் சிகிச்சைக்கு உதவ, தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சேலம், அரிசிபாளையத்தில் வசிக்கும் ராஜநந்தினி மகள் ஜனனி, 16. பத்தாம் வகுப்பு மாணவியான இவர், வில்வித்தை, சிலம்பம் போட்டியில் மாநில அளவில் பரிசு பெற்றவர். ஒன்றரை ஆண்டுக்கு முன், இரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டதால், மாணவி கோவையில் அனுமதிக்கப்பட்டார். அவரது தாய் வழங்கிய ஒரு சிறுநீரகமும், மாணவிக்கு செயலிழந்துவிட்டது. அதனால் காப்பாற்றும்படி மாணவி, முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தார். அவர், வீடியோ காலில், 'எல்லோரும் என்னை இறந்து விடுவதாக கூறுகின்றனர். எனக்கு உதவி பண்ணுங்க சி.எம்.சார். ப்ளீஸ்...' என, கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார். இதையடுத்து, அமைச்சர் சுப்ரமணியன் நடவடிக்கையால், தற்போது சென்னை, ஸ்டேன்லி மருத்துவமனையில், மாணவி அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சை தொடர்கிறது. அத்துடன், சிறுமியின் தாய் தங்க இடவசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. முதல்வரும், ஆறுதல் கூறி, மாணவியின் சிகிச்சைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X