சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலையான சிக்கன் கடை ஊழியரின் குடும்பத்துக்கு நிவாரணம் கேட்டு மறியல்

Added : செப் 27, 2021
Share
Advertisement
இண்டூர்: இண்டூர் அருகே, கொலையான சிக்கன் கடை ஊழியரின் குடும்பத்துக்கு, அரசு நிவாரணத்தொகை வழங்கக்கேட்டு, உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.தர்மபுரி மாவட்டம், இண்டூர் அருகே மல்லாபுரத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை, 38; சோமனஹள்ளியிலுள்ள ஒரு சிக்கன் கடையில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை, அங்கு வந்த சோளப்பாடியை சேர்ந்த சுந்தரம், 30, என்பவர் அவரிடம் தகராறு செய்து கத்தியால்

இண்டூர்: இண்டூர் அருகே, கொலையான சிக்கன் கடை ஊழியரின் குடும்பத்துக்கு, அரசு நிவாரணத்தொகை வழங்கக்கேட்டு, உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.


தர்மபுரி மாவட்டம், இண்டூர் அருகே மல்லாபுரத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை, 38; சோமனஹள்ளியிலுள்ள ஒரு சிக்கன் கடையில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை, அங்கு வந்த சோளப்பாடியை சேர்ந்த சுந்தரம், 30, என்பவர் அவரிடம் தகராறு செய்து கத்தியால் குத்திக்கொன்றார். அவரை இண்டூர் போலீசார் கைது செய்தனர். நேற்று, அண்ணாதுரையின் உறவினர்கள், சுந்தரத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யவும், அண்ணாதுரை குடும்பத்துக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், நேற்று காலை, 10:30 மணிக்கு மல்லாபுரத்தில், தர்மபுரி ஒகேனக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடம் வந்த டி.எஸ்.பி., சவுந்திரராஜன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியலை கைவிட்டனர். சாலை அருகே மயானம் இருந்ததால், அண்ணாதுரை உடலை அடக்கம் செய்யும் வரை, போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X