பொது செய்தி

தமிழ்நாடு

கடல் போல காணப்படும் தடுப்பணை பகுதி

Added : செப் 27, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: ஓடப்பள்ளி தடுப்பணை நீர்தேக்கம் பகுதியில், தண்ணீர் அதிகளவு தேக்கி வைக்கப்பட்டுள்ளதால், கடல் போல காணப்படுகிறது. பள்ளிபாளையம் அடுத்த, ஓடப்பள்ளியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டு, ஒன்பது மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, 2011ல் இருந்து மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டால், பத்து கி..மீ.,

பள்ளிபாளையம்: ஓடப்பள்ளி தடுப்பணை நீர்தேக்கம் பகுதியில், தண்ணீர் அதிகளவு தேக்கி வைக்கப்பட்டுள்ளதால், கடல் போல காணப்படுகிறது. பள்ளிபாளையம் அடுத்த, ஓடப்பள்ளியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டு, ஒன்பது மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, 2011ல் இருந்து மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டால், பத்து கி..மீ., தூரத்திற்கு தேங்கி இருக்கும். ஆற்றில் அதிகளவு தண்ணீர் வரும் போதும், டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும்போதும், மின் உற்பத்தி நடக்கும். கடந்த சில மாதங்களாக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பால், ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஓரிரு வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், தடுப்பணையில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதாலும், நீர்தேக்கம் பகுதி கடல் போல் காட்சியளிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X