எருமப்பட்டி பகுதிக்கு சிம்லா ஆப்பிள் வரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எருமப்பட்டி பகுதிக்கு சிம்லா ஆப்பிள் வரத்து

Added : செப் 27, 2021
Share
எருமப்பட்டி: சிம்லா ஆப்பிள் சீசன் துவங்கியதால் எருமப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், ஆப்பிள் விலை குறைந்தது. எருமப்பட்டி மற்றம் சுற்றியுள்ள பகுதிகளில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஆப்பிள் வரத்து மிகவும் குறைவாக இருந்ததால், கடந்த மாதம் வரை, 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஏழை, எளிய மக்கள் ஆப்பிள் சாப்பிடுவதை தவிர்த்து வந்தனர். தற்போது சிம்லா ஆப்பிள் சீசன்

எருமப்பட்டி: சிம்லா ஆப்பிள் சீசன் துவங்கியதால் எருமப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், ஆப்பிள் விலை குறைந்தது. எருமப்பட்டி மற்றம் சுற்றியுள்ள பகுதிகளில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஆப்பிள் வரத்து மிகவும் குறைவாக இருந்ததால், கடந்த மாதம் வரை, 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஏழை, எளிய மக்கள் ஆப்பிள் சாப்பிடுவதை தவிர்த்து வந்தனர். தற்போது சிம்லா ஆப்பிள் சீசன் கடந்த மாதம் முதல் துவங்கிள்ளதால் அந்த மாநிலத்தில் இருந்து தற்போது ஆப்பிள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் எருமப்பட்டி, வாளையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆப்பிள் விலை வெகுவாக குறைந்துள்ளது. தற்போது, ஆப்பிள் கிலோ, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், சிம்லா ஆப்பிள் சீசன், நான்கு மாதங்கள் வரை இருக்கும் என்பதால் விலை இதே போல் இருக்கும் என, விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X