திருக்கோவில் தொழிலாளர்கள் மண்டல கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருக்கோவில் தொழிலாளர்கள் மண்டல கூட்டம்

Added : செப் 27, 2021
Share
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், தமிழ்நாடு திருக்கோவில் தொழிலாளர்கள் மண்டல கூட்டம் நடந்தது. யூனியன் தலைவர் இதயராஜன் தலைமை வகித்தார். இதில், கோவில் பணியாளர்கள்,1,500 பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என அறிவித்த தமிழக முதல்வருக்கும், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவிப்பது. கோவில் பணியாளர்களின் முதல் மதிப்பெண் பெறும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த,

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், தமிழ்நாடு திருக்கோவில் தொழிலாளர்கள் மண்டல கூட்டம் நடந்தது. யூனியன் தலைவர் இதயராஜன் தலைமை வகித்தார். இதில், கோவில் பணியாளர்கள்,1,500 பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என அறிவித்த தமிழக முதல்வருக்கும், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவிப்பது. கோவில் பணியாளர்களின் முதல் மதிப்பெண் பெறும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த, மடிக்கணினி திட்டத்தை தொடர்ந்து வழங்க வேண்டும். கோவில்கள் மூலம் அமைக்கப்படும் கல்லூரிகளில், கோவில்களில் பணியாற்றும் குழந்தைகளுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். செயல் அலுவலர் பதவிக்கு கோவில் பணியாளர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், தற்கால நிலவரத்திற்கு ஏற்பவும், வேலை பளுவுக்கு ஏற்பவும் புதிய பணியிடம் ஏற்படுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் ராமதுரை, பூலுச்சாமி, மாநில துணை தலைவர்கள் சிவகுமார், குருராஜன், செயலாளர் ஆனந்தன், மாநில துணை அமைப்பாளர் நந்தகோபால், கணபதி, கோவை மண்டல தலைவர் சேஷையா, நாமக்கல் மாவட்ட செயலர் மதியழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X