கலப்பட டீசல் விற்பனை: தி.கோட்டில் 5 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கலப்பட டீசல் விற்பனை: தி.கோட்டில் 5 பேர் கைது

Added : செப் 27, 2021
Share
நாமக்கல்: திருச்செங்கோட்டில், லாரியில் வைத்து கலப்பட டீசல் விற்பனை செய்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ., அகிலன் மற்றும் போலீசார் திருச்செங்கோடு - சங்ககிரி சாலையில் உள்ள லாரி பட்டறையில், சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தப்பட்டு இருந்த டேங்கர் லாரியை சோதனை செய்தனர். அதில், 4,000 லிட்டர்

நாமக்கல்: திருச்செங்கோட்டில், லாரியில் வைத்து கலப்பட டீசல் விற்பனை செய்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ., அகிலன் மற்றும் போலீசார் திருச்செங்கோடு - சங்ககிரி சாலையில் உள்ள லாரி பட்டறையில், சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தப்பட்டு இருந்த டேங்கர் லாரியை சோதனை செய்தனர். அதில், 4,000 லிட்டர் கலப்பட டீசல் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், எவ்வித உரிமமும் இன்றி கலப்பட டீசலை அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து கலப்பட டீசலை லாரியுடன் குற்றபுலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக லாரி உரிமையாளர்கள் சேகர், 49, ரவிக்குமார், 35, பாபு, 41, மற்றும் உதவியாளர்கள் மூர்த்தி, 47, கார்த்திக், 28 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள், நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பரமத்தி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X