வாகனம் மோதி மூதாட்டி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகனம் மோதி மூதாட்டி பலி

Added : செப் 27, 2021
Share
நாமக்கல்: நாமக்கல் அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, மூதாட்டி பலியானார். நாமக்கல் அடுத்த, வேட்டாம்பாடி ஏரிக்கரையில் சாலையோரமாக, 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கடந்த, 22ல் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி இறந்தார். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில்,

நாமக்கல்: நாமக்கல் அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, மூதாட்டி பலியானார். நாமக்கல் அடுத்த, வேட்டாம்பாடி ஏரிக்கரையில் சாலையோரமாக, 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கடந்த, 22ல் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி இறந்தார். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், அவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது. அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அவர் மீது மோதிய வாகனம் எது என, நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X