பொது செய்தி

தமிழ்நாடு

குத்தகை விவசாயிகளுக்கும் மானிய விலையில் உரம் வழங்க கோரிக்கை

Added : செப் 27, 2021
Share
Advertisement
கரூர்: தமிழக அரசு வழங்கும் உரம் மற்றும் வாழை பூச்சி மருந்துகள், குத்தகை விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.கரூர் மாவட்டத்தில் லாலாப்பேட்டை, பிள்ளப்பாளையம், கருப்பத்தூர், புதுப்பட்டி, பிச்சம்பட்டி, மகாதானபுரம், திருக்காம்புலியூர், வேலாயுதம்பாளையம், நொய்யல், சேமங்கி, மரவாபாளையம், நடையனூர், திருக்காடுதுறை, நத்தமேடு, கட்டிபாளையம்,

கரூர்: தமிழக அரசு வழங்கும் உரம் மற்றும் வாழை பூச்சி மருந்துகள், குத்தகை விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


கரூர் மாவட்டத்தில் லாலாப்பேட்டை, பிள்ளப்பாளையம், கருப்பத்தூர், புதுப்பட்டி, பிச்சம்பட்டி, மகாதானபுரம், திருக்காம்புலியூர், வேலாயுதம்பாளையம், நொய்யல், சேமங்கி, மரவாபாளையம், நடையனூர், திருக்காடுதுறை, நத்தமேடு, கட்டிபாளையம், தவிட்டுப்பாளையம், புகளூர், பால்துறை, செம்படாபாளையம், தோட்டக்குறிச்சி உட்பட சுற்றுப்புற பகுதிகள் முழுவதும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. வெற்றிலை சாகுபடியை நம்பி, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவுரி, முருங்கை, அகத்திகீரை, வாழைமரம், விதை மற்றும் கன்றுகள் மூலம் நடவு செய்யப்பட்டு, செடிகள் ஆறு அடி உயரத்துக்கு மேல் வளர்ந்த பின்பு, விட்டம் என குறிப்பிட்ட செடிகளை ஒன்று சேர்த்து கட்டுவர். பிறகு, வெற்றிலை நடவுக்கு முன் பட்டத்தில் இரண்டு முறை பூச்சிக்கொல்லி மருந்துகளும் அதன்பின் போதிய வளர்ச்சிக் கான உரமும் வைக்க வேண்டும். இவற்றை பராமரிக்க, அரசு வேளாண்மை துறை மூலம் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து வழங்குவது வழக்கம். ஆனால், இவை முறையாக அனைத்து விவசாயிகளுக்கும் கிடைப்பதில்லை. குறிப்பாக நிலத்தை குத்தகை எடுத்துள்ள விவசாயிகள், அதிக விலை கொடுத்து வெளி மார்க்கெட்டில் உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகளை வாங்குகின்றனர். எனவே, குத்தகை எடுத்துள்ள விவசாயிகளின் பெயரையும் அரசு பட்டியலில் சேர்த்து, உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகளை மானிய விலையில் வழங்க வேண்டும்' என, குத்தகை விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X