பொது செய்தி

தமிழ்நாடு

கிரேனில் 'மெகா' மாலை: அரண்டு போன அமைச்சர்

Added : செப் 27, 2021
Share
Advertisement
திருச்சி: விருது வழங்கும் விழாவுக்கு வந்த அமைச்சர் நேருவுக்கு அணிவிக்க, மெகா சைஸ் மாலை தயாரித்து, அதை கிரேனில் தூக்கி நிறுத்தியிருந்ததைப் பார்த்து, அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார்.திருச்சியில், தி.மு.க., அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில், ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு பங்கேற்றார். நிகழ்ச்சியை

திருச்சி: விருது வழங்கும் விழாவுக்கு வந்த அமைச்சர் நேருவுக்கு அணிவிக்க, மெகா சைஸ் மாலை தயாரித்து, அதை கிரேனில் தூக்கி நிறுத்தியிருந்ததைப் பார்த்து, அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார்.
திருச்சியில், தி.மு.க., அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில், ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு பங்கேற்றார். நிகழ்ச்சியை நடத்தியவர்கள், நேருவை வரவேற்க 1 லட்சம் ரூபாய் செலவில், 500 கிலோ பூக்கள் மற்றும் கயிறு மூலம் கறுப்பு, சிவப்பில் மெகா சைஸ் மாலை தயாரித்தனர். அதை ஆட்களால் தூக்க முடியாது என்பதால், கிரேன் மூலம் மாலையை தூக்கி நிறுத்தி இருந்தனர். விழாவுக்கு வந்த அமைச்சர் மாலையைப் பார்த்து அரண்டு போனார். 'முதல்வர் இதுபோன்று செய்யக்கூடாது எனச் சொல்லி உள்ளார். எளிமையாக இருக்க வேண்டும். இதெல்லாம் வேண்டாம்' எனக் கூறிவிட்டு, அங்கிருந்து அகன்று விட்டார். இதனால், மெகா சைஸ் மாலை போட்டு, அமைச்சரை குளிர்விக்க நினைத்திருந்த விழா ஏற்பாட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அந்த மாலை, அங்கேயே கிரேனில் ஏற்றப்பட்ட நிலையில் சில மணி நேரம் வைக்கப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X