ரூ.16 கோடி மதிப்பில் தடுப்பூசி: அமைச்சர் சுப்பிரமணியன் மறுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.16 கோடி மதிப்பில் தடுப்பூசி: அமைச்சர் சுப்பிரமணியன் மறுப்பு

Added : செப் 27, 2021
Share
தஞ்சாவூர்: ''தசைநார் சிதைவு நோய்க்கு இதுவரை எங்கும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அது, தீர்க்கப்பட்டதாகவும் இல்லை. 16 கோடி ரூபாய்க்கு எங்குமே தடுப்பூசி இல்லை; அது வதந்தி,'' என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.தஞ்சாவூரில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்ட பின், அவர் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை 4.43 கோடி பேருக்கு

தஞ்சாவூர்: ''தசைநார் சிதைவு நோய்க்கு இதுவரை எங்கும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அது, தீர்க்கப்பட்டதாகவும் இல்லை. 16 கோடி ரூபாய்க்கு எங்குமே தடுப்பூசி இல்லை; அது வதந்தி,'' என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்ட பின், அவர் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை 4.43 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் 5 கோடியை எட்டி விடும். 500க்கும் அதிகமான கிராமங்களில், 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அ.தி.மு.க., ஆட்சியில் நாள் ஒன்றுக்கு 61 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டன. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், நாள் ஒன்றுக்கு 2.52 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசிடம் இருந்து வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும் என கேட்டுள்ளோம். அதன்படி அடுத்த வாரம் 50 லட்சம் தடுப்பூசிகள் வரப் பெற்றால், அடுத்த ஞாயிற்றுக் கிழமையும் மாபெரும் முகாம் நடத்தப்படும். இந்தியாவில் இன்னும் 115 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலையில், மற்ற நாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்வது தேவையற்றது. தசைநார் சிதைவு நோய்க்கு, இதுவரை எங்கும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. அது தீர்க்கப்பட்டதாகவும் இல்லை. 16 கோடி ரூபாய்க்கு எங்குமே தடுப்பூசி இல்லை; அது வதந்தியான செய்தி. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X