பொது செய்தி

தமிழ்நாடு

வேட்பாளர் வாபஸ் விவகாரம்: அ.தி.மு.க.,வினர் மூவர் கைது

Added : செப் 27, 2021
Share
Advertisement
வேலூர்: அ.தி.மு.க., பெண் வேட்பாளரை ஏமாற்றி, விலகல் படிவத்தில் கையெழுத்து வாங்கியதாக கூறியதால், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் இடையே, 'தள்ளுமுள்ளு' ஏற்பட்டது. இது தொடர்பாக, அ.தி.மு.க.,வினர் மூவர் கைது செய்யப்பட்டனர்.வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தலில் வாபஸ் பெற விரும்பும் வேட்பாளர்களிடம், படிவத்தில் கையெழுத்து வாங்குவது, வேட்பாளர்களுக்கு

வேலூர்: அ.தி.மு.க., பெண் வேட்பாளரை ஏமாற்றி, விலகல் படிவத்தில் கையெழுத்து வாங்கியதாக கூறியதால், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் இடையே, 'தள்ளுமுள்ளு' ஏற்பட்டது. இது தொடர்பாக, அ.தி.மு.க.,வினர் மூவர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தலில் வாபஸ் பெற விரும்பும் வேட்பாளர்களிடம், படிவத்தில் கையெழுத்து வாங்குவது, வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி, நேற்று முன்தினம் மாலை நடந்தது. காட்பாடி ஒன்றியம், எட்டாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் அம்பிகா, மாற்று வேட்பாளராக ரேவதி மனு தாக்கல் செய்திருந்தனர். இதில், ரேவதி மனுவை வாபஸ் பெற வந்தார். அவருடன் அம்பிகாவும் வந்திருந்தார். அதிகாரிகள், விலகல் படிவத்தில் கையெழுத்து வாங்கினர். அங்கு வந்த வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க., செயலரும், அணைக்கட்டு எம்.எல்.ஏ.,வுமான நந்தகுமார், 'எட்டாவது வார்டில் தி.மு.க., வேட்பாளர் கவிதா மட்டும் போட்டியிடுவதால், அவரை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்' என்றார்.

அ.தி.மு.க., வேலூர் மாநகர மாவட்ட செயலர் அப்பு, அவரது ஆதரவாளர்கள், 'ரேவதியிடம் மட்டுமின்றி அம்பிகாவையும் ஏமாற்றி, விலகல் படிவத்தில் அதிகாரிகள் கையெழுத்து வாங்கி விட்டனர். அவர் மனுவை வாபஸ் பெறவில்லை' என புகார் தெரிவித்தனர். மேலும், தி.மு.க., வேட்பாளரை வெற்றி பெற செய்ய, அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார், இரு தரப்பினரையும் வெளியேற்றினர். இது குறித்து, வேட்பாளர் அம்பிகா, தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மோகன் ரெட்டி, காட்பாடி போலீசில் கொடுத்தார். இந்நிலையில் காட்பாடி போலீசார், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த காட்பாடி செயலர் ஜனார்த்தனன், 40; மாவட்ட ஜெ., பேரவை செயலர் அமர்நாத், 45; முன்னாள் ஒன்றிய செயலர் ஆனந்தன், 46, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X