சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓசியில் 'சரக்கு' கேட்டு மிரட்டல்; வேலூரில் ரவுடி வெட்டிக்கொலை

Added : செப் 27, 2021
Share
Advertisement
வேலூர்: ஓசியில் 'சரக்கு' கேட்டு மிரட்டிய ரவுடி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.வேலூர், சைதாப்பேட்டையை சேர்ந்தவர் சரஸ்வதி, 52, பூ வியாபாரம் செய்கிறார். கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுவை அதிக விலைக்கு விற்று வருகிறார். அதே பகுதி அங்காளம்மன் கோவிலை சேர்ந்த ரவுடிகள் குமார், 26, ராஜி, 19; சரஸ்வதியிடம் கடந்த, 21ம் தேதி இரவு, கத்தியை காட்டி மிரட்டி ஓசியில்

வேலூர்: ஓசியில் 'சரக்கு' கேட்டு மிரட்டிய ரவுடி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர், சைதாப்பேட்டையை சேர்ந்தவர் சரஸ்வதி, 52, பூ வியாபாரம் செய்கிறார். கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுவை அதிக விலைக்கு விற்று வருகிறார். அதே பகுதி அங்காளம்மன் கோவிலை சேர்ந்த ரவுடிகள் குமார், 26, ராஜி, 19; சரஸ்வதியிடம் கடந்த, 21ம் தேதி இரவு, கத்தியை காட்டி மிரட்டி ஓசியில் 'சரக்கு' கேட்டு ரகளையில் ஈடுபட்டனர். அங்கு மது குடித்துக் கொண்டிருந்த சலவன்பேட்டையை சேர்ந்த தொழிலாளர்களான ரவிவர்மா, 30, ராஜேஷ், 35, தட்டிக் கேட்டனர். வாய்த்தகராறு முற்றியதால் குமார், ராஜி கத்தியால் வெட்ட முயன்றனர். அதை பறித்த இருவரும், குமார், ராஜியை வெட்டினர். படுகாயமடைந்த ரவுடிகள் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். குமார் நேற்று அதிகாலை இறந்தார். ராஜி உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். ரவிவர்மா, ராஜேசை வேலூர் வடக்கு போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X