பொது செய்தி

தமிழ்நாடு

மாணவிக்கு கொரோனா; பள்ளிக்கு 3 நாள் விடுமுறை

Added : செப் 27, 2021
Share
Advertisement
ஆரணி: ஆரணி அருகே, மாணவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, மூன்று நாட்களுக்கு பள்ளி விடுமுறை விடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த விண்ணமங்கலத்தை சேர்ந்த பிளஸ் 1 மாணவர். இவர் இங்குள்ள சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவருடன் தொடர்புடைய

ஆரணி: ஆரணி அருகே, மாணவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, மூன்று நாட்களுக்கு பள்ளி விடுமுறை விடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த விண்ணமங்கலத்தை சேர்ந்த பிளஸ் 1 மாணவர். இவர் இங்குள்ள சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவருடன் தொடர்புடைய அவரது வீட்டில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பிளஸ் 1 மாணவரின் சகோதரிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர், விண்ணமங்கலம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார். இதையடுத்து மாணவி படித்து வரும் பள்ளிக்கு மூன்று நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X