அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராஜ்யசபா தி.மு.க., எம்.பி.,யாக கனிமொழி சோமு, ராஜேஸ்குமார் போட்டியின்றி தேர்வு

Updated : செப் 27, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
சென்னை: ராஜ்யசபா எம்.பி.,யாக தி.மு.க., சார்பில் போட்டியிட்ட கனிமொழி சோமு, ராஜேஸ்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். புதுச்சேரியிலும் பா.ஜ., வேட்பாளர் செல்வகணபதியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தமிழகம் சார்பில், ராஜ்யசபாவில் காலியாக இருந்த 2 இடங்களுக்கான தேர்தல் கடந்த 9ம் தேதி அறிவிப்பு வெளியானது. அதன்படி, இவ்விரு இடங்களுக்கான தேர்தல் அக்.,4ம் தேதி
RajyaSabha, DMK, Candidates, Puducherry, BJP, ராஜ்யசபா, திமுக, வேட்பாளர்கள், போட்டியின்றி தேர்வு, புதுச்சேரி, பாஜக,

சென்னை: ராஜ்யசபா எம்.பி.,யாக தி.மு.க., சார்பில் போட்டியிட்ட கனிமொழி சோமு, ராஜேஸ்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். புதுச்சேரியிலும் பா.ஜ., வேட்பாளர் செல்வகணபதியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் சார்பில், ராஜ்யசபாவில் காலியாக இருந்த 2 இடங்களுக்கான தேர்தல் கடந்த 9ம் தேதி அறிவிப்பு வெளியானது. அதன்படி, இவ்விரு இடங்களுக்கான தேர்தல் அக்.,4ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு செப்.,15ல் துவங்கிய நிலையில், தி.மு.க சார்பில் கனிமொழி என்.வி.என்.சோமு மற்றும் ராஜேஸ்குமார் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். கடந்த 23ம் தேதி நடந்த வேட்புமனு பரிசீலனையில் இருவரின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டது. வேட்புனுவை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் இன்றுடன் (செப்.,27) நிறைவு பெற்றது.

இதனையடுத்து, தி.மு.க வேட்பாளர்கள் கனிமொழி சோமு, ராஜேஸ்குமார் ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இருவருக்கும் தேர்தல் அதிகாரியும், சட்டசபை செயலருமான சீனிவாசன் வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழ் வழங்கினார். இதன்மூலம் ராஜ்யசபாவில் தி.மு.க உறுப்பினர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.


புதுச்சேரி


latest tamil news


புதுச்சேரியில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ., கூட்டணி ஆட்சி சார்பில், ஒரு ராஜ்யசபா இடத்திற்கான தேர்தலில், பா.ஜ.,வின் செல்வகணபதி வேட்புமனு தாக்கல் செய்தார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், செல்வகணபதி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
28-செப்-202101:56:38 IST Report Abuse
meenakshisundaram நினைவாவது ஒண்ணாவது அங்கங்கே இருக்கிற பழைய பெருச்சாளிகள தொந்தரவு வேண்டாம்னு தான் இப்படி செய்யுறாரோ என்ன்வோ -உதாரணம் நிதி மந்திரி ?
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
28-செப்-202101:47:57 IST Report Abuse
John Miller வைத்தியலிங்கம் முனுசாமிக்கு இவர்கள் நன்றி தெரிவிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Balasubramanyan - Chennai,இந்தியா
27-செப்-202122:15:54 IST Report Abuse
Balasubramanyan Who are these persons. All lady MLAs and MPs in DMK and congress are in full makeup anytime. That too our south chennai MP is always at spa instead of parliment. So two more people for subsidiary meals tokens at parliment canteen. Where is Mr. RAJA?I
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X