கொஞ்சம் கருப்பட்டி காப்பியும்,நிறைய புத்தகங்களும்...

Updated : செப் 27, 2021 | Added : செப் 27, 2021
Advertisement
சென்னைசெப்-28சினிமாவில் இயக்குனராக ஜெயிக்க தீவிர வாசிப்பு பழக்கமும்,அறம் சார்ந்த அரசியல் பார்வையும் அவசியம் என இயக்குனர் ராஜூ முருகன் குறிப்பிட்டார்.சினிமா சம்பந்தப்பட்ட புத்தகங்கள் மட்டுமே விற்கக்கூடிய பியூர் சினிமா புத்தக அங்காடி கடந்த ஆறு வருடமாக சென்னை வடபழநி பகுதியில் இயங்கி வந்தது.இந்த புத்தக அங்காடி தற்போது வளசரவாக்கம் காமராசர் சாலைக்குlatest tamil newsசென்னைசெப்-28
சினிமாவில் இயக்குனராக ஜெயிக்க தீவிர வாசிப்பு பழக்கமும்,அறம் சார்ந்த அரசியல் பார்வையும் அவசியம் என இயக்குனர் ராஜூ முருகன் குறிப்பிட்டார்.
சினிமா சம்பந்தப்பட்ட புத்தகங்கள் மட்டுமே விற்கக்கூடிய பியூர் சினிமா புத்தக அங்காடி கடந்த ஆறு வருடமாக சென்னை வடபழநி பகுதியில் இயங்கி வந்தது.இந்த புத்தக அங்காடி தற்போது வளசரவாக்கம் காமராசர் சாலைக்கு மாற்றப்பட்டு உள்ளது.
இங்கு சினிமா மட்டுமல்லாது பல்வேறு தலைப்புகளிலான பொது புத்தகங்களும் நிறைய விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது மேலும் இங்கு கருப்பட்டி காபி,மூலிகை தேநீர் போன்றவைகளும் விற்கப்படுகின்றன.


latest tamil news


காபி அல்லது தேநீர் அருந்தியபடியே புத்தகங்கள் பார்க்கலாம் பிடித்த புத்தகத்தை வாங்கலாம்,புத்தகத்தை வாங்க முடியாதவர்கள் நுாலகம் போல ஒரு தொகை செலுத்திவிட்டு படித்துவிட்டு செல்லலாம்,அந்தத் தொகையும் செலுத்த முடியாதவர்கள் வாசலில் உள்ள இலவச படிப்பகத்தில் உள்ள புத்தகங்களை படிக்கலாம்.
இந்த புதிய அமைப்பிலான புத்தக அங்காடியை ‛ஜோக்கர்' பட இயக்குனர் ராஜூ முருகன் துவக்கி வைத்து பேசினார்,அவர் பேசியதாவது
நான் பதினெட்டு வயதில் பல்வேறு கனவுகளுடன் சொந்த ஊரைவிட்டு வெளியே வந்த போது எனக்கான வாசலை திறந்து வைத்தது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய கலை இலக்கிய இரவுகளும், புத்தகங்களும்தான்.
சமகால சமூக நிகழ்வை பார்க்க எனக்கான ஊடகமாக நான் சினிமாவை எடுத்துக் கொண்டேன் ஆனாலும் நான் நினைத்ததை எல்லாம் சினிமாக்கவாக முடியாத நிலைதான்.
ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை எத்தனையோ விதமாக சொல்லியிருக்கமுடியும் ஆனா் ஒரு விதமாக கூட சொல்ல முடியவில்லை அவ்வளவு ஏன் சினிமாவை பொறுத்தவரை ஈழம் என்பதே உச்சரிக்ககூடாத வார்த்தைதான்.
ஒரு சினிமா சென்சாருக்கு போய்வந்த பிறகு அடுத்த படத்திற்கு அந்த படைப்பாளி தயராகும் போது, இதை எல்லாம் ஏற்கமாட்டார்கள், இதை எல்லாம் மாற்றச் சொல்வார்கள் என்று சென்சாரை மனதில் நினைத்து தனது படைப்பை செதுக்க ஆரம்பிக்கிறான் அது கொஞ்சம் கொஞ்சமாக அவனது சுயத்தை தின்றுவிடுகிறது நாளடைவில் கொன்றும்விடுகிறது.
இந்த நிலையில் ஒடிடி தளம் வந்த போது நாம் நினைத்ததை சொல்ல ஒரு தளம் கிடைத்துவிட்டது என்று மகிழ்ந்தேன் ஆனால் நிஜத்தில் சென்சாரே தேவையில்லை எனும்படியாகத்தான் ஒடிடி தளம் உள்ளது.
ஒடிடி தளத்தில் உள்ள முகம் தெரியாத பலர் உள்ளனர் அவர்கள்தான் எனது கருத்தை தத்தவத்தை கலையை தீர்மானிக்கின்றனர்,இதற்கெல்லாம் ஒரே காரணம் அவர்களிகளிடம் உள்ள பணம்தான்.
சினிமாவில் பணம் பண்ண நான் ஒரு நாளும் நினைத்தது இல்லை ஆனால் பணம் பண்ணாத சினிமாவிற்கு நான் தேவையில்லை
பணத்தை பிரதானமாக கருதாமல் கருத்தை சுதந்திரமாக சொல்லக்கூடிய ‛சுயாதீன சினிமாக்கள்தான்' இதற்கு மாற்று, உடனடியாக இது பலன் தராவிட்டாலும் இது நாம் போட்ட விதையாக இருக்கும்,இருகட்டும்.
இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை பியூர் சினிமா புத்தக அங்காடி நிர்வாகி அருண் ஏற்பாடு செய்திருந்தார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X