பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமர் பாராட்டிய நாகநதி உறை கிணறு திட்டம்: 3,768 உறை கிணறுகள் அமைப்பு

Updated : செப் 27, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
வேலுார்: பிரதமர் மோடி பாராட்டிய நாகநதி உறைகிணறு திட்டத்தை பின்பற்றி வேலுார், திருப்பத்துாரில் உள்ள நதிகளின் குறுக்கே 3,768 உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது.‛மனதின் குரல்' என்ற ‛மான் கீ பாத்' என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி நேற்று (செப்.,26) உரையாற்றினார். அப்போது திருவண்ணாமலை, வேலுாரில் ஓடும் நாகநதி பல ஆண்டுகளுக்கு முன்பே வறண்டு விட்டதாகவும், அங்கு
நாகநதி உறைகிணறு, பிரதமர், பாராட்டு, உறை கிணறு திட்டம், வேலுார், திருப்பத்துார், 3768 உறை கிணறுகள், அமைப்பு

வேலுார்: பிரதமர் மோடி பாராட்டிய நாகநதி உறைகிணறு திட்டத்தை பின்பற்றி வேலுார், திருப்பத்துாரில் உள்ள நதிகளின் குறுக்கே 3,768 உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது.

‛மனதின் குரல்' என்ற ‛மான் கீ பாத்' என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி நேற்று (செப்.,26) உரையாற்றினார். அப்போது திருவண்ணாமலை, வேலுாரில் ஓடும் நாகநதி பல ஆண்டுகளுக்கு முன்பே வறண்டு விட்டதாகவும், அங்கு பெண்களை கொண்டு கால்வாய்களை தோண்டி தடுப்பணைகளை உருவாக்கியதால் தண்ணீர் ஓடிக்கொண்டிருப்பதாகவும், அப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இதே போல, கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாத இறுதியிலும், மனதின் குரல் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேலுார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் உறை கிணறுகள் திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்தார்.


latest tamil news



பிரதமர் மோடி பாராட்டிய திட்டம்:


வேலுார் மாவட்டம், கணியம்பாடி தாலுகாவில் மழைக்காலங்களில் நாகநதி ஓடையில் வரும் தண்ணீர் வீணாக ஏரி, குளம், குட்டைகளில் தேங்கி ஆவியாவதை தடுத்து நேரடியாக பூமிக்குள் செலுத்தக்கூடிய உறை கிணறுகள் 354 இடங்களில் அமைக்கப்பட்டதால், இப்பகுதியில் உள்ள கிராமங்களில் 50 முதல் 70 அடி மட்டத்தில் திறந்த வெளி கிணறுகளில் தண்ணீர் கிடைத்து வருகிறது. இதனால் கோடையிலும் அங்கு நெல், வாழை போன்ற தண்ணீர் தேவையுள்ள பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

எப்போதும் நாகநதியில் தண்ணீர் உள்ளது. கணியம்பாடியில் இந்த திட்டத்திற்கு கிடைத்த வெற்றியையடுத்து திருப்பத்துார் மாவட்டத்தில் திருப்பத்துார், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, ஆலங்காயம், கந்திலி, மாதனுார், வேலுார் மாவட்டத்தில் குடியாத்தம், பேர்ணாம்பட்டு, அணைக்கட்டு ஆகிய ஒன்பது தாலுகாக்களில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 18 நதிகளின் குறுக்கே 3,768 உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முழுக்க, முழுக்க பெண் தொழிலாளர்களைக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது இந்த திட்டம் 10 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pandi - Chicago,யூ.எஸ்.ஏ
27-செப்-202122:31:10 IST Report Abuse
pandi அப்படியே வாணியம்பாடியில் உள்ள பாலாற்றிலும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பெயர்தான் பாலாறு ஆனால் மணலும் இல்லை, தண்ணீரும் இல்லை. வணியம்பாடியிலுருந்து, பாலாற்றின் கரையில் நிலத்தடிநீரை எடுத்து திருப்பத்தூருக்கும் மற்ற இடங்களுக்கும் அனுப்புகிறார்கள். இந்த தண்ணீர் உபயோகத்தைப் பொறுத்து, தண்ணீரைப்பெறும் நகரங்களும், கிராமங்களும் நிலத்தடி நீரை சேகரிக்க நிதி செலுத்தவேண்டும். இதனால் அனைவரும் பயனடைவார்கள். வாணியம்பாடில், பாலாற்றில் விவசாயம் நடக்கிறது (ஆற்றையே ஆக்கிரமைப்பு). இதையெல்லாம் அப்புறப்படுத்தி, நிலத்தடி நீர் உயர தடுப்பணைகள் கட்டவேண்டும். வணியம்பாடியை சுற்றி இருக்கும் மலைகளிலும் இந்த தடுப்பணைகளை கட்டவேண்டும். இப்படி செய்தால், அடுத்த 5 வருடங்களில், நீர் மட்டமும் உயரும், கெமிக்கல் தோல் பதனிடும் ஆலைகளால் நாசமான நிலமும் வளம் பெரும்.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
27-செப்-202119:22:31 IST Report Abuse
 Muruga Vel நீங்க இந்தியாவை சேர்ந்தவர் இல்லையா ...தலிபான் வாசனை வருதே
Rate this:
Cancel
27-செப்-202117:59:55 IST Report Abuse
அப்புசாமி மூவாயிரத்து சொச்சம் உறை கிணறுகள் தோண்டியிருக்காங்க. இவரோட பாராட்டை யாரும் எதிர்பாக்கலை... இவுரு பேசாம கோதாவரி காவேரி இணைப்பில் அக்கறை காட்டலாம். இல்லே மதுரை எய்ம்ஸ் க்கு பி.எம்.கேர்ஸ்லேருந்து பணம் ஒதுக்கலாம்.
Rate this:
Rajasekaran - Chennai,இந்தியா
27-செப்-202119:28:42 IST Report Abuse
Rajasekaranதமிழக நீர் வளத்துறை மாண்புமிகு அமைச்சர் இந்த திட்டத்தைப்பற்றி எதாவது முன் அறிவிப்பு கொடுத்திருந்தாலோ அல்லது முன்பிருந்த அண்ணா தி. மு. க. அமைச்சர் எதாவது சொல்லி இருந்தாலும் அது பற்றி தெரிந்தவர்கள் தெரிவித்தால் வாசகர்களுக்கு இந்த ஆட்சிகளைப்பற்றிய ஒரு நேர்மறையான எண்ணம் வரும் ....
Rate this:
Parivel - Blore,இந்தியா
27-செப்-202119:52:39 IST Report Abuse
Parivelஉங்களுக்கு எப்போ இந்த நல்ல விஷயம் தெரியும்? பிரதமர் சொன்ன பின்னாடி தானே?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X