உலகம் எங்களை அங்கீகரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை: தலிபான்கள்| Dinamalar

உலகம் எங்களை அங்கீகரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை: தலிபான்கள்

Updated : செப் 27, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (20)
Share
காபூல்: 'தலிபான் தலைமையிலான ஆப்கன் அரசை, உலக நாடுகள் அங்கீகரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை' என, தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லாஹ் முஜாஹித் தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, அந்நாட்டை தலிபான்கள் கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளனர். தலிபான்களின் ஆட்சியை பாகிஸ்தான், ஈரான் நாடுகள் ஆதரித்தன. ஆனால்,

காபூல்: 'தலிபான் தலைமையிலான ஆப்கன் அரசை, உலக நாடுகள் அங்கீகரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை' என, தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லாஹ் முஜாஹித் தெரிவித்துள்ளார்.



latest tamil news



ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, அந்நாட்டை தலிபான்கள் கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளனர். தலிபான்களின் ஆட்சியை பாகிஸ்தான், ஈரான் நாடுகள் ஆதரித்தன. ஆனால், 'ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான்களை ஏற்கமாட்டோம்' என, அமெரிக்கா, கனடா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் தலிபான் செய்தித் தொடர்பாளரும், அரசின் தகவல் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சருமான ஜபிபுல்லாஹ் முஜாஹித் தெரிவித்து உள்ளதாவது:


latest tamil news



எங்களை அங்கீகரிக்கக் கோரி ஐ.நா.,வுக்கு கடிதம் எழுதியுள்ளோம். எங்களை அங்கீகரிக்க கோருவது எங்கள் உரிமை. ஐ.நா.,வுடன் பேச்சுவார்த்தை நடத்த தலிபான் தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். மனித உரிமைகள், பெண்களுக்கு சம உரிமை, ஆப்கனை பயங்கரவாதிகளின் புகலிடமாக இருக்காமல் பார்த்துக் கொள்வது, முழுமையான அரசை ஏற்படுத்துவது ஆகியவற்றை செய்தால் தலிபான் அரசை அங்கீகரிக்கப்பதாக உலக நாடுகள் தெரிவிக்கின்றன. இவை அனைத்தையும் விரைவில் அமல்படுத்த இஸ்லாமிய எமிரேட் ஆப்கானிஸ்தான் உறுதியளித்துள்ளது.

இதனால் ஆப்கனின் தலிபான் தலைமையிலான அரசை உலக நாடுகள் அங்கீகரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார். உலக நாடுகள் வலியுறுத்திய எதையும் தலிபான்கள் இதுவரை அமல்படுத்தவில்லை. ஆனால் அதற்கு முரண்பட்டே தலிபான்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X