சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தோல் தொழிற்சாலை வேன் கவிழ்ந்து முதியவர் பலி

Added : செப் 27, 2021
Share
Advertisement
ஆம்பூர்: ஆம்பூரில், தோல் தொழிற்சாலை வேன் கவிழ்ந்து முதியவர் பலியானார்.திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரில் 100க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதற்காக நாராயணபுரம், திம்மாம்பேட்டை, சிக்கனாங்குப்பம், ஜாப்பராபாத், கோணாமேடு, ஆம்பூர், வாணியம்பாடி, பெரியாங்குப்பம், மின்னுார் பகுதிகளில் இருந்து தொழிற்சாலைகளுக்கு சொந்தமான வேன்களில் வேலைக்கு தொழிலாளர்களை

ஆம்பூர்: ஆம்பூரில், தோல் தொழிற்சாலை வேன் கவிழ்ந்து முதியவர் பலியானார்.

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரில் 100க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதற்காக நாராயணபுரம், திம்மாம்பேட்டை, சிக்கனாங்குப்பம், ஜாப்பராபாத், கோணாமேடு, ஆம்பூர், வாணியம்பாடி, பெரியாங்குப்பம், மின்னுார் பகுதிகளில் இருந்து தொழிற்சாலைகளுக்கு சொந்தமான வேன்களில் வேலைக்கு தொழிலாளர்களை ஏற்றி வருவார்கள். இந்நிலையில், இன்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த 42 பெண்களை மகேந்திரா வேனில் ஏற்றிக் கொண்டு ஆம்பூருக்கு வந்து கொண்டிருந்தனர். பச்சகுப்பத்தை சேர்ந்த பசுபதி, 34, வேனை ஓட்டி வந்தார்.

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சான்றோர்குப்பம் என்ற இடத்தில் வந்த போது, சர்வீஸ் சாலையில் வேன் திரும்பிய போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிரே நடந்து வந்த ஆம்பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் அய்யாவு, 85, என்பவர் மீது மோதி கவிழ்ந்தது. இதில் சம்பவம் நடந்த இடத்திலேயே அய்யாவு இறந்தார். வேனில் வந்த 15 பெண் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X